வணக்கம்!
நேற்று பழனி முருகனை தரிசனம் செய்துவிட்டு வந்தேன். காலையிலேயே தரிசனம் செய்தேன். அந்த காலை நேரத்திலும் நல்ல கூட்டம் இருக்கின்றது. தமிழ்கடவுள் என்று சொல்லப்படும் முருகனுக்கு கேரளாவில் இருந்து வருபவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர்.
தமிழன் முருகனை மறந்துவிடுவான் என்று நினைக்கிறேன். கேரளாவில் இருந்து வருபவர்கள் அதிகம் பேர் மொட்டை போடுகின்றனர். என்ன செய்வது தமிழன் நல்ல விசயத்தை எல்லாம் மறந்துவிட்டு சென்றுக்கொண்டு இருக்கின்றான்.
வருடத்திற்க்கு ஒரு முறை சென்று வரவேண்டிய கோவில்களில் பழனி முருகன் கோவிலும் ஒன்று. நீங்கள் இதுவரை சென்று வரவில்லை என்றால் ஒரு முறை சென்று வாருங்கள். ஒரு முறை சென்று வந்தவுடன் வருடத்திற்க்கு ஒரு முறை சென்று வாருங்கள். அடிக்கடி சென்று வருவது கூட சிறப்பான ஒன்று.
என்னுடைய சொந்த வேலை காரணமாக பழனி முருகனை தரிசனம் செய்து வந்த காரணத்தால் நண்பர்கள் யாரையும் சந்திக்கவில்லை. இரண்டு நண்பர்கள் தொடர்புக்கொண்டார்கள் அவர்களை அடுத்தமுறை சந்திக்கிறேன் என்று வந்துவிட்டேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment