வணக்கம்!
மகாமகத்தை குறித்து ஜாதககதம்பத்தில் எந்த ஒரு தகவலையும் கொடுக்கவில்லை என்று ஒரு நண்பர் போன் செய்து கேட்டார். மகாமகத்தை பற்றி எல்லா பதிவுகளிலும் தொலைக்காட்சியிலும் வந்த காரணத்தால் அதனைப்பற்றி நான் சொல்லவில்லை.
மகாமகம் என்பது உங்களின் ஊரில் ஒரு காேவிலில் ஏதாவது ஒரு கோவிலில் தீர்த்தவாரி நடப்பது போல் கும்பகோணத்திலும் நடக்கும் ஒரு தீர்த்தவாரி தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. அதனை ஊதி பெரியதாக செய்துவிட்டார்கள்.
நமது சோதிட சாஸ்திரத்தில் நட்சத்திரத்திற்க்கு அதிக அந்தஸ்து கொடுத்து திருவிழாக்களை நடத்துவார்கள். மகம் நட்சத்திரம் வரும்பொழுது தான் தீர்த்தவாரி நடைபெறும். அந்த நேரத்தில் நீராடினால் நல்லது.
ஒரே நேரத்தில் ஒரு இடத்தில் அதிகளவு கூட்டம் வந்தால் ஆபத்தான ஒன்று. என்ன தான் பாதுகாப்பாக இருந்தாலும் எச்சரிக்கையோடு இருங்கள். கும்பகோணம் எனக்கு அருகில் இருந்தாலும் நான் புனிதநீராட செல்லவில்லை. நீங்கள் சென்றால் பத்திரமாக பாதுகாப்போடு சென்று வாருங்கள்
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment