வணக்கம்!
ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். ஒரு குழந்தை போதுமா சார் அல்லது கூடுதலாக குழந்தையை பெற்றுக்கொள்ளலாமா என்று கேட்டார். பொதுவாக நல்ல கருத்தை எதிர்பார்த்து எந்த ஒரு விசயத்தையும் என்னிடம் கேட்பது நமது நண்பர்களின் வாடிக்கையான ஒரு விசயம் அதனால் நான் சொல்லுவேன்.
அரசாங்கம் பொதுவான ஒரு சட்டத்தை நிறைவேற்றி இது அனைவருக்கும் ஒரு சட்டம் தான் என்று சொன்னால் அதனை மீறி நாம் சொல்லக்கூடாது. நம்ம சட்டம் எப்படி இருக்கின்றது என்பதை நான் சொல்லதேவையில்லை.
அதிக குழந்தை பெற்ற குடும்பம் எல்லாம் வீணாக போய்விட்டது என்று ஒரு குடும்பத்தை கூட நாம் காட்டமுடியாது. குழந்தை அதிகம் இருக்கும் வீட்டில் கலகலப்பாக இருக்கும்.
ஒரு குழந்தையோடு இருக்காமல் அதனாேடு இன்னோன்றும் பெற்றுக்கொள்ள நான் அறிவுரை சொல்லுவேன்.உங்களால் கூடுதலாக பெற்றும் அதனை சமாளிக்கமுடியும் என்றால் தாராளமாக பெற்றுக்கொள்ளலாம்.
குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கு கூட தனிகவனம் செலுத்தி நான் பரிகாரம் செய்துக்கொண்டு இருக்கிறேன். அதற்கு காரணம் அனைவருக்கும் குழந்தைபாக்கியம் கிடைக்கவேண்டும் என்ற காரணத்தால் தான் செய்கிறேன். ஒரு குழந்தை இருக்கும் ஆள்கள் எல்லாம் அடுத்ததும் பெற்றுக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment