வணக்கம்!
நேற்று ஈரோடு அருகில் இருக்கும் சென்னிமலை முருகனை தரிசனம் செய்ய சென்று இருந்தேன். சென்னிமலை முருகனை பார்த்து தரிசனம் செய்யவேண்டும் என்று நீண்ட நாள்களாக ஒரு ஆவல் இருந்தது.
நேற்று ஈராேடு சென்றப்பொழுது நண்பர் தீபன் சென்னிமலை முருகனை தரிசனம் செய்துவிட்டு வரலாம் என்று கூப்பிட்டார். நானும் சரி முருகனே நம்மை அழைத்தது போல் எண்ணிக்கொண்டு சென்று தரிசனம் செய்துவிட்டு வந்தேன்.
மலையின் மீது அமைந்துள்ள அற்புதமான கோவில் தற்பொழுது தான் இதற்கு கும்பாபிஷேகம் செய்து இருக்கிறார்கள். இதில் ஒன்றைச்சொல்லவேண்டும் ஆலயத்தை கருங்கற்களைக்கொண்டு எழுப்பியுள்ளார்கள். பழமையான கோவிலுக்கு பழமையான ஒரு நல்ல விசயத்தை கொண்டு கோவில் கட்டியிருப்பதால் அருமையாக இருக்கின்றது.
சித்தர் காேவிலும் ஒன்று இருக்கின்றது. முருகன் கோவிலுக்கு மேலே சித்தர் கோவில் உள்ளது. அதனை தரிசனம் செய்தோம். சித்தர் பெயரிலேயே பல குழப்பம் இருப்பதால் அதனை எல்லாம் நீங்கள் கோவிலுக்கு செல்லும்பொழுது பார்த்துக்கொள்ளுங்கள்.
சென்னிமலை சென்று திரும்பும் வழியில் ராசக்கோவில் என்ற ஊரில் ராசக்கோவில் என்று ஒன்று இருக்கின்றது. அதனையும் தரிசனம் செய்தோம். இந்த சாமி பெயரில் இந்த ஊரும் அமைந்து இருக்கின்றது. இது ஒரு குலத்திற்க்கு குலதெய்வமாக இருக்கின்றது. தற்பொழுது தான் இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்து இருக்கின்றார்கள். ஏதோ முன்ஜென்ம தொடர்பு நமக்கும் இந்த கோவிலுக்கும் இருந்து இருக்கலாம் அதனால் இதனை தரிசனம் செய்யும் வாய்ப்பு அமைந்தது.
நேற்று அமாவாசை என்பதால் ராசகோவிலில் நல்ல கூட்டம் இருந்தது. தள்ளுமுள்ளு செய்து சாமி தரிசனம் செய்தோம். இன்று காலை தஞ்சாவூர் வந்து சேர்ந்துவிட்டேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment