வணக்கம்!
நவராத்திரி ஹோமம் சிறப்பாக முடிவடைந்துவிட்டது. உங்களின் பங்களிப்பால் தான் இது சிறப்பாக நடந்து முடிந்தது. நல்ல சிறப்பாகவே அனைத்து ஹோமங்களையும் செய்தேன். அவர் அவர்களுக்கு சிறப்பான பலனை அம்மன் தரும்.
பரிகாரத்திற்க்கு அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வரை ஜாதகத்தை அனுப்பலாம். ஏன் இதனை தள்ளிவைத்திருக்கிறேன் என்றால் ஒவ்வொருவரும் பணக்கஷ்டத்தில் இருப்பது தெரிகிறது அதற்காக இதனை தள்ளிவைத்தேன்.
ஏற்கனவே பல பரிகாரங்களுக்கு பணம் அனுப்பமுடியவில்லை என்று சொல்லி பல நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள் ஜாதகத்தை அனுப்பவதில்லை. அதனை எல்லாம் மறந்துவிட்டு புதிய பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்பலாம்.
தனியாக பரிகாரம் செய்யவேண்டும் என்று நினைத்தால் அவர்கள் தங்களின் குடும்ப ஜாதகத்தை அனுப்பிவிட்டு குறைந்தது இரண்டாயிரமாவது அனுப்பவேண்டும். ஒரு லிட்டர் நெய் விலை 650 க்கு வாங்குகிறேன். இரண்டு லிட்டராவது தேவைப்படுகிறது. பூஜை சாமான்கள் இருக்கின்றன.
தனிநபர்கள் அனுப்பும் நபர்கள் இன்றைய நாள் என்று சொல்லி அன்றைய நாளை ஒதுக்கி பரிகாரம் செய்யலாம். வெளிப்படையாக அதனை பதிவில் இந்த ஊர் என்று சொல்லி அதனை செய்யலாம்.
தனியாக தேவைப்பட்டால் மட்டும் இப்படி செய்யுங்கள் இல்லை என்றால் பரவாயில்லை. மொத்தமாகவே உங்களுக்கு செய்துவிடுகிறேன். பரிகாரத்திற்க்கு ஐந்து தேதி வரை ஜாதகத்தை அனுப்பலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment