Followers

Saturday, September 2, 2017

குரு பெயர்ச்சி


ணக்கம்!
          குரு பெயர்ச்சிக்கு என்று நமது நண்பர்கள் பலர் போன் செய்து என்ன செய்யலாம் என்று கேட்டார்கள். கோச்சாரப்பலன்களைப்பற்றி அந்தளவுக்கு பயப்படவேண்டாம் என்று தான் சொல்லுவேன். குரு மோசமான இடத்தில் இருந்தால் மட்டும் கோவிலுக்கு சென்று குரு பகவானுக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு வரலாம்.

குரு மோசமான இடத்தில் அமர்ந்து அது பெரிய பிரச்சினையை கொடுத்தால் நீங்கள் குருவாக நினைப்பவர்களுக்கு ஏதாவது உதவலாம். அவர்களிடம் ஆசி வாங்கலாம். குரு கிரகமும் குருவும் ஒருவராக தான் இருப்பார்.

பணப்பிரச்சினையை அதிகளவில் கொடுப்பவர் குரு கிரகம். குரு கிரகம் மறைவு ஸ்தானத்தில் அமர்ந்தால் உங்களுக்கு பண விசயத்தில் சுணக்கம் ஏற்படும். பணத்தை முன்கூட்டியே சம்பாதித்து வைத்திருப்பவர்கள் பணத்தை விரையம் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

குருகிரகம் பிரச்சினை தரும் இடத்தில் இருந்தால் பங்குவர்த்தகம் பக்கம் சென்றுவிடாதீர்கள். ஒரே நாளில் அனைத்தையும் இழந்துவிடுவீர்கள். பொதுவாக நான் பங்குவர்த்தகத்திற்க்கு செல்லாதீர்கள் என்று சொல்லுவேன். குரு கிரகம் மோசமான இடத்தில் இருக்கும்பாெழுது பங்குவர்த்தகம் பக்கம் தலைவைத்து படுக்காதீர்கள்.

குரு பெயர்ச்சிக்கு வழிபாடு என்பது அவர் அவர்களின் குருவை வணங்குங்கள். குரு இல்லை என்றால் வயதில் பெரியவர்களாக இருக்கும் நபர்களுக்கு உதவுங்கள் அதோடு கோவிலுக்கு சென்று குருவை வணங்கிவாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: