வணக்கம்!
சிறப்பு வாய்ந்த ஹோமம் எல்லாம் இந்த நவராத்திரி காலங்களில் நடைபெறும். அவர் அவர்களின் சக்தி ஏற்ப ஹோமங்களை செய்வார்கள். அம்மனின் முழுமையான சக்தி கிடைக்கவேண்டும் என்பதற்க்காக இதனை செய்வார்கள்.
வடமாநிலங்களில் மிகுந்த செலவு செய்து செய்வார்கள். நமது சக்திக்கு தகுந்தவாறு இதனை செய்துக்கொள்ளலாம். நவராத்திரி ஹோமத்திற்க்கு என்று நாம் செய்யும் ஹோமம் விலை குறைந்த ஒன்று தான். நல்ல பலனை கொடுக்ககூடிய ஒன்று.
அனைவரும் இதில் பங்குக்கொள்ள வேண்டும் என்பதற்க்காக தான் இதனை குறைந்த விலையில் செய்ய பதிவில் சொல்லிருந்தேன். செலவு எனக்கு இதில் அதிகம் தான். எனக்கு என்று ஒரு ஆயிரம் ரூபாய் மிஞ்சம் அவ்வளவு தான். ஹோமத்திற்க்கு கொடுக்கின்ற பொருளோடு விலை அதிகம். விலையுர்ந்த பொருளை தான் கொடுக்கிறேன்.
ஹோமத்திற்க்கு கொடுக்கின்ற பொருளின் தன்மைக்கு தகுந்தவாறு ஹோமத்தின் பயன் இருக்கும். நம்முடைய விருப்பம் என்ன என்பதை அறிந்து அதற்கு தகுந்தமாதிரியான பொருளை கொடுத்தால் அது நடைபெறும்.
நவராத்திரி நாட்களில் உங்களால் முடிந்தளவுக்கு அம்மன் கோவிலுக்கு சென்று வாருங்கள். சிவன் கோவிலிலும் அம்மன் இருக்கும் அந்த கோவிலுக்கு சென்று வழிபட்டாலும் நல்ல பலன் கிடைக்கும்.
ஆறாவது வீட்டிற்க்கு பரிகாரம் இந்த மாதம் கடைசி வரை நீட்டிக்கப்படுகிறது. ஜாதகத்தை அனுப்பவர்கள் அனுப்பி வைக்கலாம். பரிகாரமும் தொடர்ந்து நடைபெறும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment