வணக்கம்!
சந்தித்த பல நபர்கள் பெரும்பாலும் கடன் பிரச்சினையில் சிக்கி தவிப்பராக இருக்கின்றனர். இந்த நாட்டில் இருந்துக்கொண்டு கடனில் இல்லை என்றால் எப்படி சார் என்றும் சொன்னார்கள். நாடு எதுவாக இருந்தாலும் கடன் என்பது வர தான் செய்யும்.
ஆறாவது வீடு என்ற ஒன்று இருப்பதால் கடன் அல்லது நோய் அல்லது எதிரி இப்படி ஏதாவது ஒன்றை கொடுத்துக்கொண்டு இருக்கும். கடன் இருப்பது ஒரு விதத்தில் நல்லது தான் ஏன் என்றால் அது வேறு எதாவது ஒரு பிரச்சினையை கொடுத்துவிடபோகின்றது.
மிக மோசமான கிரகங்கள் உங்களை தாக்கிக்கொண்டு இருந்தால் கடனை உடனே திருப்பிக்கொடுக்காமல் கொஞ்சம் பொறுமையாக திருப்பிக்கொடுத்தால் ஒரளவு இந்த பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
கண்டிப்பாக கொடுக்கபடவேண்டிய கடனாக இருந்தால் அதாவது வட்டி மின்னல் வேகத்தில் செல்லும் நபர்களின் கடன்களை நீங்கள் உடனே கொடுத்து அதில் இருந்து தப்பிப்பது நல்லது. நீங்கள் கொடுக்கவில்லை என்றால் அது உங்களையும் தின்று உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களையும் தின்ன ஆரம்பித்துவிடும்.
ஆறாவது வீட்டின் தசாவில் கடன் இருந்தால் கடன் கொடுப்பதை தவணை முறையில் சொல்லிக்கொண்டு கடனை திருப்பிக்கொடுங்கள் அது உங்களை காப்பாற்றும். கடன் இல்லாமல் இருக்ககூடாது என்பதால் இதனை சொல்லுகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment