வணக்கம்!
கேள்வி
KJ
One doubt. If kethu gets Guru aspect, then only its Kodiswara Yogam. But you said, if Kethu gets Sanis aspect, its Kodiswara yogam. Please clarify sir. Correct me if i am wrong.
பதில்
கேது குருவோடு இணைந்தால் அல்லது பார்த்தால் கோடிஸ்வரயோகம் இருக்காது. சனி கேதுவின் சேர்க்கை தான் கோடிஸ்வரயோகம் இருக்கும். நிறைய ஜாதகங்களை நான் அனுபவத்திலேயே பார்த்து இருக்கிறேன். சனியின் பார்வை அல்லது சனியின் வீட்டில் கேது இருந்த காரணத்தால் பணக்காரர்களாக இருக்கின்றனர்.
மகரத்தில் கேது அமர்ந்தால் அது நாட்டை ஆளூம் தலைவனாக அந்த ஜாதகரை மாற்றும் வல்லமை படைத்தது. ஜாதகர்களின் செயல்பாட்டை பொறுத்து அவர்கள் எதற்க்கு தலைவராக இருப்பார்கள் என்பது அமையும்.
கேது குருவோடு இருந்தால் அது ஆன்மீகவழிக்கு இட்டுச்செல்லும். யாருக்கும் கிடைக்காத வித்தைகள் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் பாக்கியம் கிடைக்கும். அவர் கற்ற வித்தையை வைத்து வேண்டுமானால் பணம் சம்பாதிக்கலாம். தற்சமயம் ஆன்மீகவாதிகளிடம் அதிக பணபுழக்கம் இருப்பதால் இதனை சொல்லுகிறேன் சோதிட விதி அது கிடையாது.
சனியின் பார்வையில் கேது அல்லது வீட்டில் இருக்கும் நபர்களை நீங்கள் பார்த்தால் நன்றாக செயல்பட சொல்லுங்கள். இயற்கையாகவே அவர்களுக்கு அமைந்தாலும் ஒரு தூண்டுகாேலை போடுங்கள். அவர்கள் பெரியளவில் வந்துவிடுவார்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Sir.. Thanks a lot. Enaku appadi ullathu. Magara Lagnam, Sani 10il, Kethu 12il. Sani dasa Budhan Budhi nadakirathu. Indruvarai Poradikondu irukiren sir.
Post a Comment