வணக்கம்!
இன்றைய காலக்கட்டத்தில் வாழும் ஆண்களும் சரி பெண்களும் சரி தொண்ணூறு சதவீதம் பேர் விவாகாரத்து மனநிலையில் தான் வாழ்கின்றார்கள். கோர்ட்க்கு செல்வது பத்து சதவீதம் பேர் செல்கின்றனர்.
என்ன இப்படி சொல்லுகின்றீர்கள் என்று கேட்கலாம். இல்லறத்தில் இருப்பவர்கள் எதையாவது ஒரு காரணத்தை காட்டிக்கொண்டு தான் வாழ்க்கின்றார்களை தவிர அவர்களின் மனதிற்க்கு பிடித்து வாழ்வது குறைவு.
ஏதோ திருமணம் செய்துக்கொண்டோம் ஏதோ வாழ்கிறோம் என்று வாழ்கின்றனர். மனரீதியாக வெளியில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஒரே காரணம் மட்டுமே என்னால் சொல்லமுடியும் அது ஒவ்வொரு ஜாதகத்திலும் ஆறாவது வீட்டின் அடி அதிகமாக வெளிப்படுவதால் தான் இப்படி நடக்கிறது.
ஒருத்தருக்கு விவாகாரத்து என்பது சட்டப்படியாக வெளியே காட்டாவிட்டாலும் மனரீதியாக பல பாதிப்புகளை ஆறாவது வீடு கொடுத்துவிடுகிறது. ஒரு சிலருக்கு கோர்ட்க்கு அழைத்துக்கொண்டு சென்றுவிடுகிறது.
முக்கால்வாசி பேரை பூர்வபுண்ணியம் காப்பாற்றுகிறது என்பது தான் உண்மை. அதாவது அவர்களின் குழந்தைகளுக்காக தான் பலர் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர். குழந்தைகளை கொடுப்பது பூர்வபுண்ணியம் அல்லவா. ஆறாவது வீட்டின் பாதிப்பை அதிகளவில் குறைப்பது ஐந்தாவது வீடு.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Exactly sir.. 100% True
Post a Comment