Followers

Friday, September 8, 2017

ஆறாவது வீட்டு தசா


வணக்கம்!
          ஒருவருக்கு ஆறாவது வீட்டு தசா நடந்தால் அந்த வீட்டில் சண்டை சச்சரவுக்கு குறைவில்லாமல் இருக்காது. எந்த நேரமும் ஏதாவது ஒரு காரணத்திற்க்கு சண்டை இருந்துக்கொண்டே இருக்கும். சண்டை இல்லை என்றாலும் வாய் சத்தம் அதிகமாக இருக்கும்.

அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு வேடிக்கையாகவே அவர்களின் குடும்பத்தில் உள்ள சண்டை சச்சரவு இருக்கும் என்று சொல்லலாம். சண்டை சச்சரவால் நீண்ட காலத்திற்க்கு அவர்களின் சொந்தங்கள் எல்லாம் பிரிந்து செல்வதற்க்கும் வாய்ப்பு உண்டு.

நிறைய குடும்பத்தில் பார்த்தால் அவர்களின் அண்ணன் தம்பிக்கு கூட பேசாமல் இருந்துக்கொண்டே இருப்பார்கள். இறப்பில் கூட பங்குக்கொள்ளாதவர்களாக இருப்பார்கள். ஆறாவது வீட்டு தசா முடியும் வரை இப்படி இருக்கும்.

சண்டைக்கு காரணமாகவே ஆறாவது வீடு இருப்பதால் சண்டை சச்சரவுகளை கிளப்பிவிடும். படித்தவர்களாக இருந்தால் கூட இப்படிப்பட்ட சண்டை சச்சரவுகளை போட்டுக்கொண்டு இருப்பார்கள். 

ஆறாவது வீட்டு தசா நடந்தால் நீங்கள் பேசும்பொழுது வாய் மூடி பேசவும். கொலை விழுந்தால் கூட பேசகூடாது. உக்கிரமாக இருக்கும் அம்மனை வணங்கி கொண்டு வருவது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: