வணக்கம்!
ஒரு மனிதருக்கு நோயின் தீவிரம் எந்த நேரத்தில் அதிகமாக இருக்கும் என்றால் அது இரவு நேரத்தில் தான் அதிகமாக இருக்கும். பகல் நேரத்தில் சூரியனின் தாக்கம் அதிகம் இருப்பதால் நோயின் தாக்கமும் குறைவாக தான் இருக்கும்.
ஒரு ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் இருந்தால் அவருக்கு அதிகபடியான நோயின் தொந்தரவு இருக்காது. நோய் அதிகமாக வராது என்று சொல்லலாம். சூரியன் சரியில்லை என்றால் அவருக்கு ஏதாவது ஒரு நோய் வந்துக்கொண்டு தான் இருக்கும் என்று சொல்லாம்.
ஆத்மாகாரகன் என்று அழைக்கப்படும் சூரியன் நன்றாக இருந்தால் அவரின் ஆத்மா நன்றாக இருக்கின்றது என்று அர்த்தம். ஆத்மா நன்றாக இருக்கும்பொழுது அதிகமாக நோயையும் அந்த உடலுக்கு செலுத்தவிடாது.
சூரியனின் ஆற்றல் குறையும்பொழுது அந்த உடலுக்குள் நிறைய வியாதிகளை கொண்டு வந்து கொடுத்துவிடுகிறது. அந்த உடலும் நிறைய போராட வேண்டியுள்ளது. உங்களின் ஜாதகத்தில் சூரியன் நல்ல முறையில் அமர்ந்திருந்தால் நோயைப்பற்றி பயப்பட தேவையில்லை.
நோய்க்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவனுக்கு சூரியன் நன்றாக இருக்கும்பொழுது தான் அவன் நல்ல மருத்துவனாக இருக்கமுடியும். சூரியன் சரியில்லை என்றால் மருத்துவமும் படிப்பதும் கடினம் மருத்துவதொழிலும் சரியாக இருக்காது.
அம்மன் பூஜைக்கு பணம் செலுத்துபவர்கள் தங்களின் பெயரை எனது இமெயில் அல்லது போனுக்கு தகவலை சொல்லிவிடுங்கள். யார் பணம் அனுக்கின்றனர் என்று பல நேரத்தில் தெரிவதில்லை. கொஞ்சம் கஷ்டபடாமல் பெயரை தெரியப்படுத்தவும்.
அம்மன் பூஜைக்கு பணம் செலுத்துபவர்கள் தங்களின் பெயரை எனது இமெயில் அல்லது போனுக்கு தகவலை சொல்லிவிடுங்கள். யார் பணம் அனுக்கின்றனர் என்று பல நேரத்தில் தெரிவதில்லை. கொஞ்சம் கஷ்டபடாமல் பெயரை தெரியப்படுத்தவும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment