வணக்கம்!
நமக்கு எதிரி இருந்தால் தான் நம்முடைய வாழ்க்கை போராடவேண்டும் என்ற எண்ணம் வரும். நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள எதிரி இருக்கவேண்டும். எதிரி இல்லை என்றால் நாம் சோம்பேறியாக தான் இருப்போம்.
எதிரி என்று சொல்லுவது ஒரு நபரை மட்டும் சொல்லவில்லை நமக்கு ஏற்படும் கஷ்டத்தை கூட ஒரு எதிரியாக தான் பார்க்கவேண்டும். நமக்கு ஏற்படும் ஒவ்வொரு தடையும் எதிரியாக தான் பார்க்கவேண்டும். இந்த எதிரி உங்களை சிந்திக்க வைத்து செயல்பட வைக்கும்.
ஜாதகத்தில் ஆறாவது வீட்டு அதிபதி யார் என்று பார்த்து அது எப்படி எதிரியாக வரும் என்று பார்க்கவேண்டும். ஆறாவது வீட்டில் சந்திரன் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் நம்முடைய மனம் நமக்கு எதிரியாக அமையும். ஆறாவது வீட்டில் புதன் இருந்தால் நாம் எழுதகூடிய எழுத்து நாம் போடும் கையேழுத்து நமக்கு எதிரியாக அமைந்துவிடும்.
இன்றைய காலத்தில் அவனவன் தன் குடும்பம் இருந்தால் மட்டும் போதும் என்று நினைக்கிறான். அடுத்த வீட்டில் கூட பேசுவதில்லை அதனால் எதிரி ஏற்பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நபர்களுக்கு மேலே சொன்ன எதிரிகள் இருக்கும்.
நமக்கு எதிரியாக இருக்கும் விசயகளை நாம் கண்டறிந்து அதனை மீறி எப்படி செயல்பட போகின்றோம் என்று சிந்தித்து செயல்பட்டால் போதும். இதனை கடந்துவிடலாம்.
கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதியில் உள்ளவர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும். விரைவில் சந்திக்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment