Followers

Wednesday, September 27, 2017

செல்வவளம்


வணக்கம்!
          மழை மற்றும் பனிக்காலங்களில் உங்களின் வீட்டில் செய்யும் பூஜைகளை அதிகப்படுத்த வேண்டும். ஏன் அதிகப்படுத்தவேண்டும் என்றால் உங்களின் வீட்டில் செய்யும்  பூஜை அப்படியே உங்களின் வீட்டில் தங்கி அது நல்ல சக்தியை அப்படியே தக்க வைக்க உதவும்.

ஒரு வீட்டில் பூஜை செய்கிறோம் என்று வைத்துக்கொள்வோம் அது வெயில் காலமாக இருந்தால் அது உடனே வெப்பமாக வெளியே செல்லும். மழை மற்றும் பனிக்காலத்தில் அது வெளியே செல்லாமல் அந்த சக்தி அங்கே நிலவி பல நல்ல விசங்களை இழுத்துக்கொடுக்கும்.

தற்பொழுது இருந்து தமிழகத்தில் ஒரு நல்ல சூழல் நிலவி வருகிறது. உங்களின் வீடுகளில் செய்யும் ஹோமங்கள் மற்றும் பூஜைகளை அதிகப்படுத்துங்கள். உங்களின் வீடு நல்ல சுபிட்ஷமாக இருக்கும்.

நெய் வாசம் எந்தளவுக்கு உங்களின் வீட்டில் நிலவுகிறதோ அந்தளவுக்கு உங்களின் வீட்டில் செல்வவளங்களை கொட்டி கொடுக்கும் என்பது தான் உண்மை. முடிந்தளவுக்கு இதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.

நீண்ட காலத்திற்க்கு பிறகு செல்வவளங்களைப்பற்றி ஒரு பதிவை போட்டு இருக்கிறேன். அனைவரும் இதனை செய்ய வேண்டும் என்பது தான் முக்கியமான ஒன்று. ஏதோ படித்தோம் போனோம் என்று இருந்து விடாமல் செயலில் இறங்குங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: