Followers

Thursday, September 7, 2017

குரு

ணக்கம்!
          குரு பெயர்ச்சி பலருக்கு நல்ல விசயத்தையும் ஒரு சிலருக்கு மோசமான பிரச்சினையும் தந்து இருக்கின்றது. குரு நன்றாக இருப்பவர்கள் சுப நிகழ்ச்சி வீட்டில் நடைபெறும். குரு நன்றாக இருந்தால் உடனே சுபநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

கோச்சாரப்பலன் பெரியளவில் நன்மை தராது என்றாலும் குரு பெயர்ச்சி மட்டும் சுபநிகழ்ச்சிக்கு அதிகம் பலனை கொடுப்பதால் உங்களின் வீட்டில் திருமணம் வீடு கட்டுதல் போன்ற சுபநிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுங்கள்.

தீமை தரும் நிலையில் குருபெயர்ச்சி உங்களுக்கு இருந்தால் உடனே குருவுக்கு அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்துக்கொள்ளுங்கள். இந்த தகவலை ஏற்கனவே நான் சொல்லிருந்தாலும் மறுமுறை சொல்லுவதற்க்கும் காரணம் இருக்கின்றது.

குரு ஐந்தாவது மற்றும் ஒன்பதாவது வீட்டின் பலனை அதிகம் கொடுக்ககூடிய ஒரு கிரகம். பூர்வபுண்ணியமும் பாக்கியஸ்தானமும் அடிபடகூடாது என்பதால் இதனை மறுமுறை உங்களிடம் சொல்லுகிறேன்.

அம்மன் பூஜை விரைவில் நடைபெற உள்ளதால் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் உடனே செலுத்த அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: