வணக்கம்!
ஒருவரின் ஜாதகத்தில் அதிகப்பட்ச கிரகங்கள் அடிப்படும்பொழுது அவர்க்கு என்ன மாதிரியான பிரச்சினை வரும் என்று கடந்த ஜாதக அனுபவத்தில் பார்த்தோம். இதில் பெரிய சிக்கலாக கருதப்படுவது அவர்களின் திருமண வாழ்க்கை தான் என்பது அனுபவத்தில் தெரிந்தவர்களுக்கு நன்றாக புரியும்.
கிரகங்கள் கெடும்பொழுது அவர்களுக்கு முப்பது வயதை தாண்டி சென்ற பிறகு தான் திருமணம் நடைபெறும். ஒரு சிலருக்கு நாற்பது வயதை தொடும் காலத்தில் திருமணம் நடைபெறும். இதில் என்ன சிக்கல் என்று கேட்கலாம்.
ஒருவருக்கு நாற்பது வயதில் திருமணம் நடைபெற்றால் அவர்க்கு எந்த வருடம் வாரிசு வரும் என்று சொல்லமுடியாது. ஒரு வருடத்தில் வாரிசு வந்தாலும் அவர்க்கு வாரிசுக்கு இவரால் என்ன பெரியதாக செய்துவிடமுடியும்.
ஒரு சில காலக்கட்டத்திற்க்கு பிறகு அவரின் உடலும் மனமும் ஒத்துழைக்காது. எப்படி சம்பாதிப்பது என்பது கேள்வி குறியாக மாறிவிடும். வாரிசுகளுக்கு தேவையானவற்றை இவரால் செய்துக்கொடுக்கமுடியாது.
உண்மையில் இதனைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை என்பது தான் தெரிகிறது. ஏன் என்றால் ஒவ்வொருவரின் மனநிலையும் நூறு வயது வரை நம்மால் வேலை செய்யமுடியும் என்ற ஒரு தவறான கணக்கால் இப்படி இருக்கின்றார்கள்.
ஒரு சிலர் இளம்வயதில் திருமணம் நடைபெற்றாலும் அவர்களுக்கு குழந்தைகள் இருந்தாலும் சம்பாதிக்காமல் இருந்துக்கொண்டு இருக்கின்றனர். இவர்கள் ஏதோ ஒரு லட்சியம் என்று அதன் பின்னாடியே சென்று இவர்களின் வாழ்க்கையை தொலைத்துவிடுகின்றனர்.
நான் ஜாதககதம்பத்தில் இருந்து வந்த நிறைய பேர்களிடம் சொல்லிருக்கிறேன். இன்று இருப்பது போல நாளை நீங்கள் இருக்கமாட்டீர்கள். சும்மா காலத்தை வீணாடிக்காமல் உடனே செயல்பட்டு தேவையானவற்றை பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லிருக்கிறேன்.
மேலே சொன்ன அனைத்தும் படித்து பார்த்தால் உங்களுக்கு புரியாது. நீங்கள் அமர்ந்து இதனைப்பற்றி எல்லாம் சிந்தனை செய்து பார்த்தால் தான் இதில் உள்ள எதார்த்தம் தெரியும். கனவு வாழ்க்கை என்பது வேறு. பிராடிக்கல் வாழ்க்கை என்பது வேறு என்பதை புரிந்துக்கொண்டால் நல்லது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment