வணக்கம்!
பலரின் வாழ்க்கையில் உற்று நோக்கி அதனைப்பற்றி நன்றாக தெரிந்த பிறகு உங்களிடம் இதனை சொல்லுகிறேன். ஒருவர் எந்தவித செலவும் செய்யாமல் கஞ்சதனமாக பணத்தை சேமித்து வைத்துக்கொண்டே இருந்தால் அவர்களுக்கு கடைசியில் பெரிய ஒரு இழப்பு ஏற்பட்டுவிடுகிறது.
கடைசிக்காலத்தில் அல்லது அவர்களின் வாழ்க்கையில் இடையில் கூட அவர்களுக்கு ஒரு பெரிய இழப்பு ஏற்பட்டுவிடுகிறது. ஒரு சிலர் மருத்துவமனையில் தேவையில்லாமல் ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரை செலவு செய்து உயிரை காப்பாற்றமுடியாமல் திணறுகின்றனர்.
ஜாதகத்தில் உள்ள மறைமுகமாக உள்ள வீடுகளுக்கு எல்லாம் நாம் கொஞ்சம் தீனி போட்டால் தான் இப்படிப்பட்ட பிரச்சினை எல்லாம் அதிகம் வராமல் இருக்கும். மறைமுகவீடுகளுக்கு தீனியே போடவில்லை என்றால் கண்டிப்பாக அது பெரிய இழப்பை கொடுத்துவிடும்.
சேமிப்பது நல்லது அதே நேரத்தில் கொஞ்சம் செலவும் நாம் செய்யும்பொழுது தான் நமக்கு தீங்கு வராமல் பாதுக்காக்க முடியும். அது உங்களின் மறைமுகமான விசயத்திற்க்கு கூட செலவு செய்யலாம்.
நான் எதுவும் செய்யமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டு இருந்தால் கண்டிப்பாக நீங்கள் ஆன்மீகவழியில் அதிகமாக செலவு செய்யவேண்டும். ஏதாவது ஒரு வழியில் உங்களிடம் இருந்து பணம் செல்லவேண்டும். இதனை செய்தால் பெரிய இழப்பில் இருந்து காப்பாற்றிக்கொள்ளலாம்.
பல நண்பர்கள் வெளியூர்களுக்கு ஏன் வரமாட்டீர்கள் என்று கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். விரைவில் வெளியூர் பயணமும் இருக்கின்றது. சென்னை கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதியில் பயணம் இருக்கின்றது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment