Followers

Saturday, March 3, 2018

ஜாதக அனுபவம்


வணக்கம்!
          ஒவ்வொரு நாளும் ஒரு வித படப்படப்போடு வாழ்க்கை சென்றுக்கொண்டு இருந்தால் அவர்களின் தசாநாதன் சரியில்லை என்று சொல்லலாம். நீண்டகால தசாநாதனின் தசா நடந்து இப்படிப்பட்ட மாதிரியான வாழ்க்கை சென்றுக்கொண்டு இருந்தால் அவர்களின் வாழ்க்கை கஷ்டம்.

ஒவ்வொருநாளும் என்ன நடக்கும் என்று மனதில் ஒரு போராட்டமாக இருக்கும். தசாநாதன் சரியில்லை என்று அர்த்தம்கொள்ளவேண்டும். தசாநாதன் சரியில்லாமல் புத்திநாதனால் பெரியதாக ஒன்றும் கொடுத்துவிடமுடியாது.

தசாநாதன் நன்றாக இருந்து புத்திநாதன் சரியில்லாமல் இருந்தால் கூட தசாநாதன் நல்லதை கொடுத்துக்கொண்டே இருக்கும். ஒரளவு பெரிய பிரச்சினை எல்லாம் வந்துவிடாது. அப்படியே சென்றுக்கொண்டு இருக்கும்.

ஒரு ஆணுக்கு இப்படிப்பட்ட பிரச்சினை இருந்தால் அவர்களின் துணைவியார் நல்ல கடவுள் பக்தி இருந்தால் இப்படிப்பட்ட தசாவை ஒரளவு சமாளித்துவிடலாம். அவரின் துணைவியாரின் பக்தி மற்றும் அவர் உங்களின் மீது காட்டும் அக்கறையால் அவர்க்கு அந்த தசாவின் கெடுதல் பலனின் இருந்து மீறி நல்லது நடக்கும்.

இளைஞர்களாக இருந்தால் அவர்களின் வாழ்க்கை கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும். அவரின் தாயார் பக்தி வழியில் இருந்தால் ஒரளவு நன்றாக ஓட்டிவிடலாம். யாரும் இல்லை என்றால் நீங்களே நன்றாக தெய்வவழிபாட்டை மேற்க்கொண்டு வாருங்கள் கண்டிப்பாக நன்றாக இருக்கலாம்.

திங்கள்கிழமை அன்று கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதியில் இருக்கும் நண்பர்கள் என்னை சந்திக்கலாம். சந்திக்க விருப்பம் இருப்பவர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: