Followers

Tuesday, March 20, 2018

சோதிடதொழில்


வணக்கம்!
          ஒரு நண்பர் ஒரு கேள்வி கேட்டார். கிரகங்களைப்பற்றி எல்லாம் சொல்லுகின்றீர்கள் சோதிட தொழில் எவ்வாறு செய்வது என்பதை சொல்லுங்கள். 

தொழில் இரகசியத்தை வெளியில் சொல்லக்கூடாது என்பார்கள். கேள்வி கேட்டுவிட்டீர்கள் அதற்கு உண்மையான பதிலை தந்துவிடுகிறேன் அனைவருக்கும் பயன்படும். சோதிடத்தில் அனைத்தையும் தெரிந்துவிட்டாலும் விதிகள் எல்லாம் இருந்தாலும் திறன்பட அந்த தொழிலை செய்வது என்பது மிகுந்த சவாலான ஒன்று.

ஒரு சோதிடன் அவன் சொல்லும் பலன் மற்றும் அவனின் பரிகாரம் அவனுக்கு பெருமை சேர்க்கும். நாம் சொல்லுகின்ற பலன் ஒருவருக்கு நடக்கும்பொழுது மட்டுமே நம்மை நம்புவார்கள் அதேப்போல வருகின்றவர்களுக்கு நாம் கொடுக்கும் பரிகாரமும் வேலை செய்யவேண்டும்.

சோதிடபலன் தவறாக இருக்கும்பொழுது ஒரு சோதிடன் அவன் தப்பிக்க ஏதாவது ஒன்றை அடித்துவிடுவான். பரிகாரம் வேலை செய்யவில்லை என்றாலும் ஏதாவது ஒரு சாக்கு சொல்லுவது உண்டு. முழுபொறுப்பும் சோதிடக்காரனை மட்டுமே சேரும் என்பதை ஒரு சோதிடக்காரன் நன்றாக அறிந்துக்கொள்ளவேண்டும்.

நம்மை தேடிவரும் வாடிக்கையாளர்களை பற்றி நாம் எந்தவிதத்திலும் குறைச்சொல்லவே முடியாது. நாம் சொல்லுகின்ற பலன் மற்றும் பரிகாரம் அவர்களுக்கு நடந்துவிட்டால் கண்டிப்பாக வாழ்க்கை முழுவதும் நம்மோடு பயணம் செய்வார்கள். 

நாம் இயற்கையைப்பற்றி ஆராய்ந்து அதனை பலனாக சொல்லுகின்றோம். இயற்கைக்கு எதிராக நாம் செயல்படகூடாது அதாவது நம்மிடம் சோதிடம் பார்க்கின்றவர்களை நாம் ஒருநாளும் குறைச்சொல்லவே கூடாது.

நமது பலன் சரியில்லை என்றாலும் நாம் கொடுத்த பரிகாரம் நடைபெறவில்லை என்றால் கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் நமக்கு எதிராக கருத்து கூறுவார்கள். அவர்களிடம் நீங்கள் கோபபடவாய்ப்பு இருக்கும் அவர்களிடம் அல்லது உங்களின் மனதில் வன்மத்தை ஏற்படுத்திவிடகூடாது. வரும் வாடிக்கையாளர்கள் எந்த காலத்திலும் நன்றாகவே வாழவேண்டும் என்ற பிராத்தனை மட்டுமே இருக்கவேண்டும்.

நம்மை நாடி வந்து பலன் கேட்பவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்ற மனது உங்களிடம் இருந்தால் நம்மை நாடி வருபவர்களுக்கு உங்களால் பலன் இல்லை என்றாலும் புதிய புதிய ஆட்கள் உங்களை நாடி வருவதற்க்கு இயற்கை துணை புரியும்.

எந்த தொழில் செய்தாலும் அந்த தொழில் தான் அவர்களுக்கு எமனாக அமையும். இந்த தொழில் கொஞ்சம் அதிகமாகவே எமனாக அமையும் என்பது தான் உண்மை. அடுத்தவர்களின் கர்மாவை பார்க்கும் மனிதனுக்கு அளவுக்கு அதிகமாக கர்மா சேரும். இதனை கருத்தில் கொண்டு இந்த தொழிலை செய்யலாம்.

என்னுடைய சொந்த அனுபவத்தை நான் சொல்லிருக்கிறேன். அனைத்திற்க்கும் நானே பொறுப்பு ஏற்று அதனை ஏற்றுக்கொள்வேன். எப்படி என்னுடைய திறமையை வரும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவது உண்டு. உங்களுக்கு இந்த பதில் ஏற்றுக்கொள்ளும் விதமாக இருந்தால் நீங்களும் பின்பற்றலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: