Followers

Thursday, March 22, 2018

தெய்வம் அன்றே கொல்லும் அரசன் நின்று கொல்வான்


வணக்கம்!
          தெய்வம் நின்று கொல்லும் அரசன் அன்றே கொல்லுவான் என்பது தானே பழமொழி. இது என்ன மாறி தெய்வம் அன்றே கொல்லும் அரசன் நின்று கொல்லுகிறான் என்று உங்களுக்கு தோன்றும்.

இன்றைய காலத்தில் நாம் செய்யும் பாவம் எல்லாம் நாமே அனுபவிக்கும்படியாகவே இருக்கின்றது. அந்த காலத்தில் சொல்லுவார்கள் தாத்தா என்ன பாவம் செய்தாராே இவனுக்கு இப்படிப்பட்ட கஷ்டம் வந்திருக்கிறது என்பார்கள். இன்று இவன் என்ன பாவம் செய்தானோ இவனுக்கு இப்படி வந்திருக்கின்றது என்று சொல்லுகின்றனர்.

நாம் தற்பொழுது வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற வாழ்க்கையில் நாம் செய்த பாவம் அனைத்தும் நமக்கு உடனே வந்துவிடுகிறது. அதனால் தான் தெய்வன் அன்றே கொல்லுகின்றது என்று சொன்னேன். 

நாம் ஒரு பிரச்சினை ஒரு வம்பு வந்து இருக்கின்றது என்று அரசாங்கத்தை நாடினால் அது உடனே தண்டனை கிடைக்காது. காலம் தாழ்த்தி தான் தற்பொழுது எல்லாம் தண்டனை கிடைக்கிறது அதுவும் கடினம் என்றே சொல்லாம் ஆனால் தெய்வம் உடனுகுடன் தண்டனை கொடுத்துவிடுகிறது.

நான் சிறுவயதில் இருக்கும்பொழுது எல்லாம் ஒருவர் மரணம் அடைகிறார் என்றால் அது அவ்வளவு எளிதில் நடைபெறாது. அவர் படுத்து படுக்கையாக இருந்து அவர்க்கு மாதக்கணக்கில் கதை படிப்பார்கள். கதை என்றால் இராமாயணம் மகாபாரதம் விஷ்ணு புராணம் என்று இறப்பை நோக்கி அவர்கள் பயணப்பட்டு மோட்சத்தை அடைய இதனை செய்வார்கள்.

தற்பொழுது உடனுகுடன் மரணம் வந்துவிடுகிறது. இப்பொழுது தான் அவரிடம் பேசிக்கொண்டு வந்தேன் அதற்குள் இறந்துவிட்டார் என்று சொல்லுகின்றனர். தற்பொழுது நான் பார்க்கும் இடம் எல்லாம் திடிர் மரணம் தான் நடக்கிறது. ஒருவருக்கு கூட மேலே சொன்ன கதை படிப்பதில்லை. அந்தளவுக்கு நாட்டில் அநியாயம் தலைதூக்கிவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அதாவது மனிதன் நீதியாக நடப்பதில்லை.

நாம் மனரீதியாக நிறைய தவறு செய்வதால் தான் நிறைய பிரச்சினை வருகின்றது. மனரீதியாக பிரச்சினை இல்லாமல் இருந்தாலே நன்றாக இருக்கும். அதோடு வில்லங்கமாகவும் செயல்படகூடாது முடிந்தவரை நல்லவனாக இருப்பதற்க்கு முயற்சி செய்யலாம்.

நவஅம்மன் பொதுயாகத்திற்க்கு கொடுத்தவர்களுக்கு வாட்ஸ்அப்பில் புகைப்படம் வரவில்லை என்றால் உடனே தொடர்புக்கொள்ளவும். நவஅம்மன் பொதுயாகம் சிறந்த முறையில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800  

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: