Followers

Saturday, March 24, 2018

ஜாதக அனுபவம் :: பணவரவு


வணக்கம்!
          பொதுவாக ஒரு ஜாதகத்தை வைத்து வேலை செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. வருடக்கணக்கில் என்னோடு பயணிப்பவர்களுக்கு மட்டும் அதனை அவ்வப்பொழுது செய்துக்கொண்டு இருப்பேன். கண்டிப்பாக நான் என்ன செய்கிறேன் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கும். வருடக்கணக்கில் இருப்பவர்களுக்கு அதனை செய்தால் தான் அவர்களும் வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள்.

ஒரு முறை ஒரு ஜாதகத்தில் கடுமையான பணத்தொல்லை தற்சமயம் இருந்துக்கொண்டு இருக்கின்றது அது கொஞ்சம் பிரச்சினையாக இருக்கின்றது என்று அந்த நபர் சொல்லியிருந்தார். சரி செல்லுங்கள் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன்.

அவரின் லக்கினம் கடகம் அவரின் இரண்டாவது வீட்டில் செவ்வாய் அமர்ந்திருக்கின்றது. மகம் நட்சத்திரத்தில் செவ்வாய் சென்றுக்கொண்டு இருக்கின்றார். சூரியனை நாம் கைவைத்தால் சரியாகாது செவ்வாயை கேதுவின் நட்சத்திரத்தில் செல்கின்றது பாம்புவின் நட்சத்திரம் மகத்தை சரி செய்துவிடலாம் என்று வேலை செய்துவிட்டேன்.

உண்மையில் அவர்க்கு சொந்த ஊரில் ஏதோ ஒரு நிலம் ஏற்கனவே விலைபேசிவிட்டு பணத்திற்க்காக இழுத்து அடித்து இருக்கிறார்கள். நாம் செய்த நேரத்தில் அவர்க்கு அந்த பணம் கிடைத்துவிட்டது. நாம் நினைத்தது கொஞ்சமாக பணம் வந்தாலும் தொடர்ச்சியாக வரட்டும் என்று செய்தேன். அவர்க்கு கொஞ்சம் அதிகமாகவே கிடைத்துவிட்டது.

இரண்டில் உள்ள செவ்வாய் பணத்தை கொடுத்ததோடு அவர்களின் குடும்பத்தில் சண்டையை உருவாக்கிவிட்டது. பணத்தை பங்குகொள்வதில் அண்ணன் தம்பியோடு பிரச்சினை வந்தது. அவர் என்னிடம் போன் செய்து விசயத்தை சொன்னார். மறுபடியும் அந்த செவ்வாயை சரி செய்து அதனை நிறுத்தினேன். ஏன் சொல்லுகிறேன் என்றால் ஒரு சில இடத்தில் ஒரு சில பிரச்சினையும் கொடுக்கும்.

ஒவ்வொருவரையும் நல்ல முறையில் வரசெய்து இருக்கிறேன் என்றால் கண்டிப்பாக அவர்களின் பின்பு இப்படிப்பட்ட வேலைகளை நிறையவே செய்து இருக்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: