Followers

Monday, March 12, 2018

ஜாதக அனுபவம் :: தோஷம்


ணக்கம்!
         ஒவ்வொருவரும் தனக்கு இந்த தோஷத்தால் பாதிப்பு இருக்கின்றது என்று அவர்களே ஒரு தோஷத்தை மனதில் நினைத்துக்கொண்டு செயல்பாடுகளில் குறைவைத்துவிடுகின்றனர். வாழ்க்கை முழுவதும் அதனால் மனஉளைச்சலிலும் பாதிப்படைகின்றனர்.

சோதிடர்கள் செய்யும் தவறு என்று சொல்லலாம். உங்களுக்கு கடுமையான தோஷம் என்று ஏதாவது ஒரு தோஷத்தை சொல்லிவிடுவார்கள். நீங்களும் இதனையே நினைத்துக்கொண்டு பின்பற்றி வருவீர்கள்.

ஒருவருக்கு ஒரு பெரிய தசா கெடுதலை கொடுத்தால் அவர்களால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாது. இரண்டு தசா அவர்களுக்கு தொடர்ச்சியாக அடிக்க ஆரம்பித்துவிட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது இல்லாமல் போய்விடும். இரண்டு பெரிய தசா என்பது கிட்டதட்ட முப்பது வருடங்களுக்கு மேல் நடக்கும்பொழுது அவர்களின் வாழ்க்கை அதனால் பாதிப்படையும்.

நாம் ஏதோ ஒரு குறிப்பிட்ட தோஷத்தை மட்டும் நாம் சொல்லிக்கொண்டு இருக்க தேவையில்லை என்பது தான் எனது கருத்து. அது தோஷமாகவே உங்களுக்கு தெரியவந்தாலும் அதற்க்காக பெரியளவில் காட்டிக்கொள்ள தேவையில்லை. அதனை போக்க எளிய பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் அல்லது வழிபாட்டை செய்தாலே போதும்.

முக்கால்வாசி பேர்களுக்கு அவர்களின் ஜாதகத்தில் அவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கும் தோஷம் இருப்பதில்லை. பலர் சொல்லுவதால் நீங்களும் அதனை நினைத்துக்கொண்டு இருக்கவேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: