வணக்கம்!
ஒருவரின் ஜாதகத்தில் லக்கினாதிபதி பூர்வபுண்ணியாதிபதி நன்றாக இருந்தால் அவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று சொல்லிருந்தேன் அதோடு பாக்கியஸ்தான அதிபதியும் நன்றாக இருந்தால் மிக சிறப்பான ஒரு வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துவிடுவார்கள்.
ஒருவர் வாழ்கின்றார் என்றால் அவர் எடுத்த முடிவு எல்லாம் அவர்க்கு சாதகமாக அமைந்த காரணத்தால் மட்டுமே அவர் சிறந்த வாழ்க்கையை வாழ்கின்றார் என்று அர்த்தம். அவர் எடுத்த முடிவுக்கு எந்த வித தடைகளும் குறுக்கே வராமல் இருந்த காரணத்தால் தான் அவர்க்கு நல்லது நடந்து இருக்கின்றது என்று அர்த்தம்.
ஒருவர் எடுத்த அனைத்து காரியமும் தடையை ஏற்படுத்தினால் அவர்க்கு வாழ்க்கையே வெறுப்பாக அமைந்துவிடும் அல்லவா. ஒருவர்க்கு அதிக தடைகளை ஏற்படுத்துவது பாக்கியஸ்தானமாக இருக்கும்.
பாக்கியஸ்தானம் கெட்டுவிட்டால் ஒருவர்க்கு எதுவும் நல்லதாக நடக்காது. நல்லது நடக்கிறது போல இருக்கும் கடைசியில் அது கை நழுவி போய்விடும். இப்படிப்பட்டவர்களுக்கு பாக்கியஸ்தானம் கெட்டு இருக்கின்றது அர்த்தம்.
பாக்கியஸ்தானம் நன்றாக இருந்துவிட்டால் அவர் வாழ்வது மட்டும் அல்லாமல் பிறர்க்கும் நல்லது செய்வார். பாக்கியஸ்தானம் நன்றாக இருந்தால் அவரால் ஊரில் உள்ளவர்களும் வாழ்வார்கள். பாக்கியஸ்தானத்திற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது இந்த காரணத்தால் மட்டுமே கொடுத்து இருக்கின்றனர்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment