வணக்கம்!
ஆன்மீகத்தில் ஆரம்பத்தில் ஆரம்பிக்கும்பொழுது எனக்குள் நிறைய திமிர் இருந்தது என்று சொல்லலாம். எல்லாம் நம்மால் தான் நடக்கிறது என்ற ஒரு கர்வம் தான் அது ஆனால் காலம் செல்ல செல்ல அது எவ்வளவு பெரிய தவறு என்று புரிந்தது.
ஒரு குரு நமது ஆத்மாவில் அவர் தன்னுடைய சக்தியை கொடுத்து அவரின் வழியாக அனைத்தும் செய்ய வைக்கிறார். ஒரு காரியம் மட்டும் நம்மால் நடக்கிறது என்று சொல்லலாம். என்ன என்றால் நம்முடைய ஆத்மா பயன்படுத்தபடுகின்றது அதன் பிறகு வேறு ஒன்றும் நம்மிடம் கிடையாது.
நான் எழுதுகிறேன் நான் பிறர்க்கு நன்மை செய்கிறேன் என்றால் அது அனைத்தும் என்னுடைய குரு மட்டுமே பொறுப்பு நான் பொறுப்பு இதற்கு வகிக்ககூடாது. ஆன்மீகத்தில் காலம் செல்ல செல்ல இது புரியவரும்.
நமக்குள் நடக்கின்ற அனைத்தும் குருவின் வேலை மட்டுமே என்பது எனக்கு காலம் சென்ற பிறகு தெரியவந்தது. உங்களுக்கும் இது புரிய ஆரம்பிக்கும் நேரம் என்பது கண்டிப்பாக வரும். நீங்கள் ஒரு குருவிடம் சென்றால் கர்வம் என்பது இல்லாமல் இருங்கள் அனைத்தும் உங்களுக்குள் நடக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment