Followers

Sunday, March 4, 2018

அரசாங்க வேலை பரிகாரம்


ணக்கம்!
          அரசாங்க வேலையில் சேர்வது நல்லது என்று அடிக்கடி சந்திக்கும் நண்பர்களிடம் சொல்லிவருவேன். அரசாங்க வேலையில் எப்படியாவது சேர்ந்துவிடவேண்டும் நினைக்கும் நண்பர்களும் இருக்கின்றனர்.

அரசாங்க வேலை என்றாலே அது சூரியகிரகத்தை குறிக்ககூடிய ஒரு கிரகம் என்பதால் சூரியன் கிரகம் ஜாதகத்தில் சரியில்லை என்றால் அவர் ஒன்பது வாரம் சூரியனுக்கு விளக்கு ஏற்றி வழிபட்டு வாருங்கள் என்று சொல்லுவது உண்டு.

சூரியனுக்கு வாரம் தோறும் விளக்கு ஏற்றுவது ஒரு முறை என்றால் உணவில் கோதுமையை அதிகம் எடுத்துக்கொண்டாலும் அரசாங்க வேலை உங்களுக்கு கிடைக்கும். அனைவரும் கோதுமையை சாப்பிடுகின்றனர் அனைவருக்கும் கிடைக்குமா என்று கேட்கலாம். என்ன நோக்கத்திற்க்காக சாப்பிடுகிறோம் என்பதில் முக்கியமாக கவனமாக இருந்தால் இது சாத்தியப்படக்கூடிய ஒன்று.

கோதுமையை தொடர்ச்சியாக உணவில் எடுத்துக்கொண்டு வாரந்தோறும் நவகிரகத்தில் உள்ள சூரியனுக்கு விளக்கேற்றி வழிபட்டுக்கொண்டு வாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு அரசாங்கத்தில் இருந்து நல்ல சேதி வரும்.

நாம் உண்ணும் உணவும் நம்மை வழிநடத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. உண்ணும் உணவு உங்களை அதற்கு தகுந்தார் போல் வழிநடத்தும் என்பது அனுபவ உண்மை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: