வணக்கம்!
மகரலக்கினத்திற்க்கு நான்காவது வீடாக வருவது மேஷம். மகர லக்கினத்தை கொண்டவர் அதன் அதிபதி சனிக்கிரகம் நான்காவது வீட்டிற்க்கு சென்றால் நல்லது என்பதை விட அதிகமான பிரச்சினையை கொடுக்கும்.
சனிக்கிரகம் நீசம் அடைந்தால் அது விரையவீட்டில் தரும் பலனை விட அதிக மோசமான பலனை கொடுக்கும். சனிக்கிரகத்திற்க்கு நான்காவது வீடு என்பது நல்லதல்ல. அதற்கு காரணம் நான்காவது வீடு நீசவீடாக அது எடுத்துக்கொள்வதால் தான் அப்படி பலனை தரும்.
நீசம் என்பது முழுபலனையும் இழந்துவிடக்கூடிய ஒரு அமைப்பு. நீச கிரகம் எந்த காலத்திலும் பலனை கொடுக்கமுடியாத ஒரு அமைப்பு. அது நமக்கு ஒரு சாபமாகவே இருக்கின்றது. நீசகிரகத்தால் நன்மையை விட தீமையை தான் தரும். இது சனிக்கு மட்டும் அல்ல எல்லா கிரகத்திற்க்கும் ஒரே மாதிரியாக தான் இருக்கும்.
சனிக்கிரகம் நீசம் என்பதால் நிறைய உடல் ரீதியாக தான் பிரச்சினை வரும். உடல்களைப்பாகவே இருக்கும். கழுத்துக்கு மேல் நிறைய பிரச்சினை வரும். கண்டம் வந்துக்கொண்டே இருக்கும் என்பதால் உடலில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
சனியின் அனைத்து பண்பும் கிடைக்காமல் போய்விடும் என்று சொல்லலாம். தொழில் அமையவே அமையாது. ஏதோ ஒரு தொழில் அமைந்தால் அந்த தொழில் உள்ள தொழிலாளிகள் அமையவே மாட்டார்கள். உங்கள் மேல் தொழிலாளிகள் வெறுப்பாகவே நடந்துக்கொள்வார்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment