வணக்கம்!
நாம் எந்த காரியம் செய்தாலும் சந்திரனை கணக்கில் கொண்டு செய்தால் அந்த காரியம் வெற்றியை தந்துவிடும். சந்திரன் நமக்கு சாதகம் இல்லாமல் செல்லும் நாட்களில் நாம் செய்யும் காரியம் ஒரளவு தான் பயன்தரும்.
நவஅம்மன் பொது யாகத்திற்க்கு அனுப்பிய ஜாதகத்தில் எல்லாம் முதலில் சந்திரன் சரியாக செல்லாத நாட்களாக இருந்தால் அவர்களுக்கு முதலில் அதற்கு பூஜையை செய்த பிறகு தான் நவஅம்மன் பொதுயாகத்தை தொடங்குகிறேன்.
சந்திராஷ்டமம் வருகின்ற நாட்களில் அவர்களுக்கு செய்யும் பூஜைகள் முழுபலனையும் கொடுக்காது. முழுபலனும் நாம் செய்யும் யாகத்தில் இருந்து கிடைக்க வேண்டும் என்பதற்க்காக அந்த பூஜையை முடித்தபிறகு செய்தேன்.
உங்களின் ஒவ்வொரு நாளிலும் நீங்கள் செய்கின்ற காரியத்திற்க்கு முதல்நாள் உங்களுக்கு சந்திரன் என்ன பலன் கொடுக்கின்றது என்பதை பார்த்து தெரிந்துக்கொண்டு அதன்பிறகு அதற்க்கு தகுந்தார் போல் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.
சந்திரனால் ஒரு செலவு உங்களுக்கு இருக்கின்றது என்றால் மாதத்தில் நீங்கள் வாங்குகின்ற உங்களின் வீட்டிற்க்கு தேவையான சாமான்களை அன்றைய தினத்தில் வாங்கி வீணான செலவுகளை குறைத்துவிடலாம். ஒரளவு நம்முடைய திட்டத்தில் நமது ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் செல்வது போல செய்யலாம்.
மனிதனால் அனைத்தையும் கணக்கிட்டு வாழ்க்கையை செலுத்துவிடமுடியாது. ஒரளவு நாம் கணித்து அதற்கு தகுந்தார்போல் செயல்படும்பொழுது நம்மால் நிறைய விசயங்களை தன்னுடைய ஆளுமைக்கு கீழ் கொண்டு வந்துவிடலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
அய்யா
அருமையான பதிவு
Post a Comment