Followers

Thursday, March 1, 2018

ஜாதக அனுபவம்


ணக்கம்!
          ஒரு தசா தன்னுடைய தசாவை நடத்தும்பொழுது ஒவ்வொரு புத்தியாக வரும். ஒவ்வொரு புத்திநாதனும் தன்னுடைய பலனை ஜாதகருக்கு கொடுத்துக்கொண்டு இருக்கும். புத்திநாதன் அமர்ந்த இடம் ஜாதகருக்கு நல்ல இடமாக இருந்தால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

புத்திநாதன் வேலை செய்யும் விதத்தில் கோச்சாரபலனையும் கொஞ்சம் கணக்கில் எடுத்துக்கொண்டு பலனை சொன்னால் மிகச்சரியாக ஒரு பலனை சொல்லலாம். கோச்சாரபலனுக்கு தகுந்தமாதிரி நல்லதும் கெடுதலும் கொடுத்துக்கொண்டு இருக்கும்.

ஒரு தசாவின் புத்திநாதன் சனி என்று வைத்துக்கொள்வோம். சனிக்கிரகம் எப்படி பலனை கொடுக்கும் என்றால் கோச்சாரபலனில் எப்படி சனி சென்றுக்கொண்டு இருக்கின்றதை பொறுத்து பலனை கொடுக்கும்.

கோச்சாரத்தில் சனி சென்றுக்கொண்டு இருப்பது சரியில்லாத ஒரு இடமாக இருந்தால் ஜாதகர் அந்த நேரத்தில் பிரச்சினையில் அதிகம் மாட்டிக்கொள்வார். கோச்சாரபலனின் உள்ள பலனை அதிகப்படுத்தி புத்திநாதனாக இருக்ககூடியவர் கொடுத்துவிடுவார்.

புத்திநாதன் எங்கு அமர்ந்திருந்தாலும் கோச்சாரத்தில் அந்த நாதன் எப்படி சென்றுக்கொண்டு இருக்கின்றான் என்பதை கவனிக்கவேண்டும். கோச்சாரத்தில் நன்றாக இருந்தால் நல்லபலனை கொடுக்கும்.

எட்டாவது வீட்டில் புத்திநாதன் அமர்ந்து கோச்சாரத்தில் அவர் ஐந்தில் சென்றுக்கொண்டு இருந்தால் அவர்க்கு பெரியதாக ஒன்றும் நடந்துவிடாது அதற்கு மாறாக அவர்க்கு லாட்டரி அடிப்பது போல அவர்க்கு யோகம் அடிக்கும் என்று சொல்லலாம்.

அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம். விரைவில் அம்மன் பூஜை நடத்தப்படும்.

நவஅம்மன் பொது யாகத்திற்க்கு தங்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தோடு காணிக்கையை செலுத்தலாம். அம்மன் பூஜை முடிவடைந்தவுடன் நவஅம்மன் யாகம் ஆரம்பிக்கப்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: