வணக்கம் நண்பர்களே இப்பதிவில் ஐந்தாவது வீட்டின் மூலம் திருமணத்தில் ஏற்படும் நிகழ்வுகளை பார்க்கலாம். இந்த ஐந்தாவது வீடு என்பது பூர்வ புண்ணியஸ்தானம் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறது. பூர்வ புண்ணியத்தை வைத்து தான் இந்த பிறவியில் என்ன நல்லது நடக்கும் என்ன கெடுதல் நடக்கும் என்று சொல்லுவார்கள். இந்த ஒரு வீடு நல்ல இருந்தாலே போதும் நீங்கள் வாழ்க்கையில் மிகுந்த நல்ல வசதி வாய்ப்போடு வாழ்வீர்கள் என்று 75 சதவீதம் சொல்லிவிடலாம்.
இந்த வீடு திருமணத்திற்க்கு என்ன செய்கிறது என்று பார்க்கலாம் பூர்வ புண்ணியம் நன்றாக இருந்தால் தான் திருமணம் நடைபெறும். பூர்வ புண்ணியத்தில் சிக்கல் இருந்தால் திருமணம் நடைபெறாமல் போகும் அல்லது திருமண வாழ்வில் பிரச்சினையை உண்டு செய்து முன்பிறவி பாவத்தின் கணக்கை தீர்த்துக்கொள்ளும்.
இந்த ஐந்தாம் வீடு நல்ல இருக்கும்பட்சத்தில் எல்லா விசயத்திலும் நன்றாக இருக்கும் என்று சொல்லுகிறீர்கள் இந்த ஐந்தாவது வீடு கெட்டால் மாற்று ஏற்பாடு ஏதாவது இறைவன் வைத்திருக்கிறா என்று கேட்டால இந்த வீட்டிறக்கு மாற்றாக குரு கிரகம் நல்ல இருந்தால் நல்லது நடக்கும். ஐந்தாவது வீட்டிற்க்கு காரகனாக குருவை வைத்திருக்கிறார்கள்.
இந்த பூர்வ புண்ணிய வீட்டைக்கொண்டு தான் உங்களுக்கு இருப்பது மென்மையான உள்ளமா அல்லது அடுத்தவரை கெடுக்கும் உள்ளமா என்று தெரியவரும். அதைப்போல உங்களின் காதலை காட்டும் இடமும் இது தான் உங்களின் குழந்தைகளை காட்டும் இடமும் இது தான்.
நாம் முதலில் காதலைப்பற்றி பார்ப்போம் இந்த ஐந்தாவது வீட்டில் நல்ல கிரகங்கள் தங்கியிருந்தால் சுகமான காதல் அனுபவங்கள் ஏற்படும் நல்லவர் காதலராக அமைவார். காதல் வானில் சிறகடித்து பறக்கலாம் அவரே உங்களுக்கு வாழ்க்கை துணைவராக அமைவார்.இந்த மாதிரி நடந்துவிட்டால நல்லது.
இந்த வீடு கெட்டால் உங்களை காதலில் விழ செய்து அந்த காதலை தோல்வியை அடைய செய்துவிடும். உங்களின் மனநிலை பழையதை நினைத்து ஏங்கசெய்துவிடும்.பிறகு என்ன உங்கள் மனநிலை பாதிப்படைய செய்யும். வாழ்க்கையின் மீது வெறுப்பு அடைந்து எங்கே சென்றால் நிம்மதி வரும் என்று நினைக்க தோன்றும்.
எனக்கு வரும் போன்களில் அதிகபட்சமாக கேட்கும் கேள்வியே நான் ஒருத்தரை காதலித்தேன். அவர் என்னை விட்டு போய்விட்டார். நான் ஒரு பெண்ணை காதலித்தேன் அந்த பெண் இப்பொழுது என்னுடன் பேசுவதில்லை எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. எனக்கு வழி சொல்லுங்கள் என்று தான் அதிகமாக கேட்கிறார்கள். நான் என்ன செய்வது
ஜாதகங்களில் இந்த வீடு கெட்டால் அதுபோல் நடந்து தான் தீரும். இடையில் வரும் கோச்சாரபலன்கள் மற்றும் தசாபுத்தி பலன்கள் உங்கள் காதலுக்கு வேட்டு வைத்துவிடும். நீங்கள் முதலில் காதல் செய்தால் திருமணத்தை உடனே வைத்துக்கொள்வது நன்மை அளிக்கும் இல்லை ஒவ்வொன்றாக பரிகாரம் செய்து முடிப்பதற்க்குள் உங்களின் துணைவருக்கு திருமணத்தை நடத்திவிடுவார்கள்.
இந்த வீடு கெட்டால் "பரதேச வாழ்வு" தான் இருக்கும் உங்கள் குடும்பத்தினரை விட்டு வெளியிடங்களில் வாழ வேண்டிய கட்டாயத்தை இந்த வீடு செய்யும். காதலில் ஒருவர் விழுவதற்க்கு தனிமை தான் முதல் காரணமாக இருக்கமுடியும் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஒருவர் தேவை என்பதால் காதலில் விழுந்துவிடுகிறார்கள்.
இந்த வீடு கெட்டால் உங்கள் ஊரில் வாழவேண்டிய கட்டாயம் இருந்தாலும் வாழாதீர்கள் ஏன் என்றால் வெளியிடங்களில் வாழ்ந்தால் தான் உங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
குழந்தை ஸ்தானம் எனவும் ஐந்தாம் வீட்டை அழைப்போம். தனக்கு பிறக்கும் குழந்தைகளை காட்டகூடிய ஸ்தானம். திருமண வாழ்வில் குழந்தைகள் என்பது முக்கியமான ஒன்று. குழந்தைகள் இல்லை என்றால் அந்த திருமண வாழ்வு சிறக்காது. அந்த தம்பதினர் நல்ல இருந்தாலும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கேள்வி கேட்டே பேச்சால் கொலை செய்துவிடுவார்கள். வேறு கிரக நிலைகளை வைத்து குழந்தை பாக்கியம் இருந்தாலும். அந்த குழந்தைகளின் எதிர்காலம் கேள்வி குறியாகதான் இருக்கும்.
என்ன தான் இருந்தாலும் இந்த ஐந்தாவது வீடு திருமணத்தில் இப்படி விளையாடகூடாது என்று நினைக்க தோன்றுகிறதா இந்த வீட்டில் இது தான் இருக்கிறதா இன்னும் வேறு ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்துமா என்று அடுத்த பதிவில் பார்க்கலாம். தொடரும்...
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
3 comments:
5ம் வீடு கெட்டால் பரதேச ஜீவனம் தான்,உள்ளூர் ஆண்டி தீர்த்தாண்டிங்கிற மாதிரி நம்ம பேச்சுக்கு மரியாதை இருக்காது, உள்ளூரில் இருக்கும்போது நமக்கே நம்மைப் பிடிக்காது,ஏதோ கை,கால் கட்டிப்போட்ட மாதிரி தான் இருக்கும். 5ல் சனி,ராகு,கேது இருந்தால் மரியாதையாக நாமாகவே சொந்த ஊரை விட்டு வெளியேறி விடுவது சாலச்சிறந்தது. கேது இருந்தால் கேட்கவே வேண்டாம். ஊரில் ஒரு பையலும் மதிக்கமாட்டான். அதிர்ஷ்டம் ரொம்ப தூரம் ஆகிடும்.குலதெய்வ வழிபாடு செய்வது மிகுந்த நன்மையைத் தரும்.
Rajaram
வருக வணக்கம் தங்கள் கருத்து அனைவருக்கும் பயன்படும்.
hello sir ,
regularly reading ur blog. nice informations
Post a Comment