வணக்கம் நண்பர்களே திருமணமும் பூர்வபுண்ணியமும் பகுதியில் இப்பதிவில் பரிகாரம் என்ன என்று பார்க்கலாம். எனக்கு ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் கெட்டுவிட்டது என்று கவலைபட்டு உட்கார்ந்து கொண்டு இருக்கவேண்டாம். அதற்கு என்ன வழி என்று பாருங்கள்.
திருமணத்தில் முடிந்தவரை நன்றாக தெரிந்தவரை துணைவராக தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அவர் நல்லவராக இருந்தால் எந்த தகுதியும் இல்லாமல் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள் அது உங்கள் வாழ்க்கைக்கு உத்திரவாதமாக இருக்கும். துணைவரை நாம் பார்த்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளை எப்படி தேர்ந்தெடுக்கமுடியும். குழந்தைகள் மீது அதிக பாசம் இல்லாமல் இருப்பது நல்லது. நாமே குழந்தைகள் நமக்கு ஏன் குழந்தைகள் என்று அரசாங்கத்தின் விளம்பரத்தை பார்த்து அதுபோல் நடந்துகொள்ள வேண்டியது நல்லது.
இராமேஷ்வரம் நல்ல பரிகார தலம் அங்கு சென்று ஒரு நாள் தங்கிவிட்டு மறுநாள் வாருங்கள். ராமநாதரை நன்றாக தரிசனம் செய்யுங்கள் வீட்டில் ராமன் பூஜை லிங்கத்தை வாங்கிவந்து தினசரி வணங்குகள்.
எனது வேறுபதிவில் சேதுபுராணத்தில் இருந்து ஒரு தகவலை தருகிறேன் படித்து பாருங்கள்
சேது புராணம் என்னும் புராணத்தில் பிரம்மஹத்தி தோஷம் விலக என்ன செய்யலாம் என்று ஒரு பாடல் கொடுத்து இருக்கிறார்.
பூந்தவிசி னிருந்தபிரான் முதலோர் காணப்
புண்டரிக மகள்கொழுநன் புகழி லங்கை
வேந்தனுயிர்ப் பழிகழுவு முகத்தால் யார்க்கும்
விடையவனே யுடையவனாம் வேத வாய்மை
யாந்தரங்கம் வெளிசெய்வா னனை வ ரோடு
மனைற்துகந்த மாதனத்தி லருச்சித் தேத்து
மேந்துபுனற் சடிலமுடி யிராம நாத
னிணையடிச்செந் தாமரைக ளிறைஞ்சி வாழ்வாம்.
பதுமாசனத்தில் இருந்த பிரம்ம தேவன் முதலானோர் காண (பங்கயவல்லியான) சீதாப் பிராட்டியின் கணவனான இராமன் இலங்கா புரிக்கிறையவனாகிய இராவணனுயிர் போக்கிய பிரம்மகத்தி தோஷத்தால் இலட்சுமணர் முதலானவர்களுடன் புறப்பட்டுக் கந்தமாதன பருவத்தை அடைந்து பூசனை செய்தேத்திப் போற்றும் கங்காதரனான இராமலிங்கனாய் எவர்க்கும் வேதாகம இரகசியத்தை உபதேசிக்க விடை மேல் வந்து தரிசனந்தருபனுடைய செந்தாமரைத் திருவடியிணைகளைச் சேவித்து வாழ்வாம்.
பூந்தவிசு = பதும ஆசனம்
புண்டரிக மகள் = பங்கயவல்லியான சீதை
கொழுநன் = கணவன்
இலங்னை வேந்தன் = இராவணன்
ஆந்தரங்கம் = அந்தரங்கம்.
திருமணமும் பூர்வபுண்ணியமும் பகுதி முடிவடைந்தது அடுத்த பதிவில் வேறு ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
Dear RajeshSubbu
I have doubt Mithuna lagna 5th place Saturn(uchha), Moon(Rasi) and Kethu.
But for me - Viruchiga lagna -6th kethu, 7th place guru, 8th moon, 9th saturn and 10th place Sun,Sukkiran,Bhudhan and 11th place Sevvai(Lagnadhibadhi) with Mandhi and 12th place Rahu
Marriage 2008 - 2009 child birth (SON).
Could you please explain my horoscope showing Saturn(uchha), moon and kethu combination in Fivth place. suppose saturn dasa will affect my son or my wife.
Thanks
regards
Arul Kumar Rajaraman
Post a Comment