Followers

Thursday, October 11, 2012

பிருகாண்ய உபநீஷம்



வணக்கம் நண்பர்களே இன்று நல்ல கருத்தை உங்களிடம் எனது வேறு பதிவில் இருந்து தருகிறேன். படித்து பயன் அடையுங்கள் 

ஏகாப்பட்ட உபநிடங்களுக்கு விளக்கம் எழுதியிருக்கிறேன் அது எல்லாம் அவ்வப்பொழுது பதிவில் தருகிறேன்.  5 லெவலில் எழுதிக்கொண்டு இருக்கிறேன் அனைத்தும் என்னுடைய ஆராய்ச்சி மாணவர்களுக்காக. உங்களுக்கும் வரும் அனைத்தையும் கொடுத்தால் நீங்கள் ஒடிவிடுவீர்கள். காலம் வரும்பொழுது ஒவ்வொன்றாக பதிவில் வரும்.

இந்த கருத்து பல சத்சங்களில் சொல்லிருந்தாலும். என்னுடைய வழியிலும் சொல்லிருக்கிறேன் பாருங்கள்


 பிருகாண்ய உபநீஷத்தில் ஒரு சுலோகம் இருக்கிறது

"ஆத்மா கரே க்ருஷ்ட வியகா சொருதவியகா மந்தவியகா நிசித்தாதசவியகா"

என்று இருக்கிறது இதை ஒரு கதைவழியாக உங்களுக்கு விளக்குகிறேன்.

இந்த சுலோகத்தை எல்லாரும் சொல்லியுள்ளார்கள் ஏன் உங்களுக்கு கூட தெரிந்து இருக்கலாம் இருந்தாலும் தெரிந்துக்கொள்ளுங்கள்

அது என்ன என்றால் ஒரு ஊரில் கணவன் மனைவி இருந்தார்கள் ஒரு நாள் கணவன் மனைவியை கூப்பிட்டு நான் மோட்சம் அடைய போகிறேன் நான் காட்டுக்கு சென்று தவம் இயற்ற போகிறேன் அதனால் இந்த சொத்துக்களை எல்லாம் எடுத்துக்கொள் என்று கூறினார்.

அந்த தர்மபத்தினி  சொன்னால் இந்த சொத்தை வைத்துக்கொண்டு நீங்கள் எந்த இடத்துக்கு போகாலமோ அந்த இடத்திற்க்கு நானும் போகலாமா என்று கேட்டாள். இப்ப இருக்கின்ற பெண்களாள இருந்தால் என்ன நினைப்பார்கள் நீங்கள் இல்லையேன்றாலே எனக்கு சொர்க்கம் தான்என்று கூட நினைப்பார்கள். ஆனால் அவர் அந்த தர்மபத்தினியின் கேள்வியை பார்த்து ஒரு கணம் அதிர்ந்து விட்டார்.

பெண்ணே இதை வைத்துக்கொண்டு நீ இந்த லோகத்தில் இருப்பவர்கள் எங்கு செல்லலாமோ அங்கு தான் செல்லலாம் என்று சொன்னார். அப்பொழுது அந்த பத்தினி சொன்னால் நீங்கள் கொடுத்தது அப்ப ஒழுங்கான சொத்து கிடையாது. உங்களுக்கு எது உயர்ந்த சொத்தோ அதை தான் எனக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னால்.

அப்பொழுது சொன்னார் ஆத்மா கரே க்ருஷ்ட வியகா சொருதவியகா மந்தவியகா நிசித்தாதசவியகா.

கடவுளைப்பற்றி அறிந்து கேட்டு அவரை தியானித்தால் நீ மோட்சத்தை அடையலாம்.

இது தான் வழி இந்த சொத்துதான் அழியாத சொத்து இதை நான் உனக்கு சொல்லிட்டேன் நான் புறப்பட்டு போகிறேன் என்றார்.

இந்த சொத்துதான் அழியாத சொத்து இதை நான் உனக்கு சொல்லிட்டேன் நான் புறப்பட்டு போகிறேன் என்றார். அதற்கு அந்த தர்மபத்தினி சிரித்துக்கொண்டே இதற்கு நீங்கள் தனியாகதான் போகவேண்டுமா என்றாள். அதற்கு கணவன் நான் தனியாக சந்நியாசியாக போய் கடவுளை தேடவேண்டும் என்று நினைத்து இருந்தேன் நீயும் வந்துவிட்டால் சம்சார வழியிலேயே போய் தேடலாமே என்று சொன்னார்.


ஆத்மா கரே

நம்முடைய ஆத்மாவைக்கொண்டு

க்ருஷ்ட வியகா

கடவுளைப்பற்றி

சொருதவியகா

கடவுளைப்பற்றி நிறைய கேட்கவேண்டும். அவரது குணம் அவரது மேனி அனைத்தையும் பற்றி நிறைய கேட்கவேண்டும்.

மந்தவியாகா

அப்படி கேட்ட விஷயத்தை மனதிற்க்குள் சிந்திக்க வேண்டும். அது தான் தியானம்.

நிசித்தாதசவியகா

தியானத்தை ஒரு பத்து நிமிடத்தோடு நிறுத்திவிடகூடாது தொடர்ந்து சிந்திக்கவேண்டும்.

"அனவரத சிந்தனம் " என்று சமஸ்கிரத்தில் சொல்லுவார்கள். அப்படி என்றால் இடைவிடாது சிந்தனை செய்ய வேண்டும். அப்படி சிந்தனை செய்யும் போது அந்த சிந்தனை உங்களை உயர தூக்கிக்கொண்டு போய்விடும்.

கடைசியாக திரும்ப திரும்ப ஒரு விசயத்தை சிந்தனை செய்தால் அந்த விசயம் நம் கண்ணைவிட்டு செல்லாது. நீங்கள் கண்ணை மூடினாலும் உங்கள் மனதிற்க்குள் ஒளிவீசிக்கொண்டு இருப்பார். கண்ணை திறந்தாலும் உங்களுடனே அவர் இருப்பார்.

இந்த உடம்பை கொடுத்திருக்கிறார். நல்ல சுகத்தை கொடுத்து இருக்கிறார். உங்களுக்கு நல்ல குடும்பத்தை கொடுத்து இருக்கிறார்.எத்தனையோ சாஸ்திரத்தை கொடுத்து இருக்கிறார் எத்தனையோ மகாபுருஷர்களை கொடுத்து இருக்கிறார் இவர்கள் எல்லாம் உங்களுக்கு ஞானத்தை கொடுப்பவர்கள். இந்த ஞானத்தை கொண்டு நீங்கள் கடவுளை அடையவேண்டும்.

இத்தனையும் உங்களுக்கு கொடுத்து இருக்கிறார் என்றால் கடவுள் உங்களை அவரிடம் அடைய கடவுள் கொடுத்த முயற்சி தான் அது என்று நீங்கள் நினைக்க நினைக்க உங்கள் மனம் அவனை நோக்கி திரும்ப ஆரம்பிக்கும். எத்தனைக்கு எத்தனை ஒருத்தரைப்பற்றி நினைக்கிறோமே அவனை மதிக்க ஆரம்பித்துவிடுவோம். எத்தனைக்கு எத்தனை ஒருத்தரை மதிக்கிறோமோ அவனைப்பற்றி நினைக்க ஆரம்பித்துவிடுவோம். எத்தனைக்கு எத்தனை நினைக்கிறோமே அவரே உங்களுக்கு தரிசனம் கொடுக்க ஆரம்பித்துவிடுவார். இது தான் கடவுளை அடைய வழி என்று சாஸ்திரம் சொல்லுகிறது.

இந்த இடத்தில் ஒரு கேள்வி உங்கள் மூளையில் தோன்றும் நான் ஏன் ஒரு கடவுளை நோக்கி சிந்தனை செய்ய வேண்டும். நான் இதை படித்துக்கொண்டு இருக்கிறேனே இந்த கம்யூட்டரை சிந்தனை செய்ய கூடாது என்று கேட்க தோன்றும். இப்பொழுது நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது  என்றால் எது உயர்ந்த விசயமாக இருக்கிறதோ அதை தான் நீங்கள் சிந்தனை செய்ய வேண்டும்.

நீங்கள் வைத்துள்ள கம்யூட்டரை விட ஒரு நல்ல கம்யூட்டர் புதிதாக வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் அப்பொழுது நீங்கள் அதனை ஒரு கடையில் பார்க்கிறீர்கள் அப்பொழுது என்ன நினைக்க தோன்றும் இந்த கம்யூட்டரை வாங்கவேண்டும் என்ற ஆசை வருகிறது. அப்பொழுது அதனைப் பற்றி விசாரிக்கிறீர்கள் அதை வாங்காமல் வீட்டுக்கு வந்துவிடுவீர்கள் அந்த கம்யூட்டரைப்பற்றி உங்கள் சிந்தனை சென்று கொண்டே இருக்கும்.

அப்பொழுது உங்கள் நண்பர் வீட்டு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம் அந்த கம்யூட்டரைப்பற்றி பெருமையாக சொல்லுகிறார் உங்கள் ஆசை என்ற சிந்தனையை அவர் தூண்டி விடுகிறார் உங்களுக்கு அலுவலகத்தில் வேலை பார்க்க பிடிக்காது. எந்த நேரமும் அதனைப்பற்றி சிந்தனை செய்துக்கொண்டு இருப்பீர்கள் அதனை வாங்கினால் தான் உங்கள் மனம் அமைதி அடையும். ஒன்றும் இல்லாத ஒரு கம்யூட்டருகே இவ்வளவு சிந்தனை என்றால் மிக உயர்ந்த கடவுளை அடைய எவ்வளவு சிந்தனை செய்ய வேண்டும் என்று உங்களுக்கு இப்பொழுது புரியும்.

இந்த மாதிரி தொடர்ந்த சிந்தனை ஒரு விசயத்தில் நீங்கள் பார்த்து இருக்கலாம் நீங்கள் காதல் செய்யும் போது இதனை அனுபவித்து இருக்கலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் காதல் உணர்வு கடவுளை அடைய ஒரு படி காட்டுகிறது. சில பேர் அதிலேயே இருந்துவிடுகிறார்கள் ஒரு சிலர் அதனை தாண்டி கடவுளிடம் காதல் கொள்கிறார்கள்.

சிந்தனை ஒன்று மட்டும் இருந்தால் போதுமா என்றால் கிடையாது அதனுடன் வேறு ஒன்று சேரவேண்டும் அப்பொழுது தான் உங்களுக்கு அந்த ஒன்று கிடைக்கும்.

கம்யூட்டரை வாங்கும் போது அறிவு அங்கு இருக்கும் அது எவ்வாறு வேலை செய்யும் அதனின் வேகம் எப்படி இருக்கும் என்ற அறிவு மட்டும் இருக்கும்.

உங்கள் குடும்பத்தை எடுத்துக்கொள்வோம் அங்கு நீங்கள் காட்டுவது அன்பு மட்டும் தான் இருக்கும் அறிவோடு உங்கள் குடும்பத்தை பார்த்தீர்கள் என்றால் ஒரு நாள் கூட குடும்பத்தோடு வாழமுடியாது. அறிவோடு பழகினால் உங்ககளை ஏன் சொந்தமாக வைத்திருக்கிறோம் என்று குடும்பத்தார்கள் நினைப்பார்கள். குடும்பத்தில் அன்பு மட்டும் தான் இருக்கும். அவர்கள் என்ன தப்பு செய்தாலும் காட்டிக்கொள்ளமாட்டீர்கள்.

கம்யூட்டர் வாங்கும் போது அறிவு தேவைப்படும் குடும்பத்திற்க்கு அன்பு தேவைப்படும்.

உங்கள் அம்மா உங்களுக்கு இட்லியை கொடுப்பார் அந்த இட்லி மட்டும் கொடுத்தால் உங்களுக்கு சாப்பிட பிடிக்காது. இங்கே இட்லி என்பது சிந்தனை. சிந்தனை மட்டும் செய்தால் அது வறண்டு விட வாய்ப்பு உண்டு. இட்லி என்ற சிந்தனையோடு இனிப்பு என்ற அன்பை வைத்து கொடுத்தால் நீங்கள் விரும்பி உண்பீர்கள். சிந்தனையோடு அன்பையும் சேர்த்து கொடுத்தால் பக்தி மலர்ந்து உங்களை நோக்கி தெய்வம் வரும்.

இப்பொழுது நீங்கள் நினைக்கலாம் பக்திக்கு தேவை அறிவா அன்பா என்று. நீங்கள் சிந்திப்பது அறிவு. இந்த சிந்தனை செல்ல செல்ல அன்பாக மாறும். 
அன்போடு கலந்து சிந்தனை செய்தால் கடவுளின் பாதத்தை அடையலாம்.

அன்பு செலுத்துவதில் இப்பொழுது பெரிய பிரச்சினை உள்ளது இப்பொழுது யாரும் அடுத்தவர்களில் மேல் அன்பு செலுத்துவதில்லை அன்பு செலுத்தினால் அவன் எதாவது கேட்டுவிடுவானோ என்று எண்ணத்தோன்றுகிறது இப்பொழுது பார்த்தீர்கள் என்றால் மனிதனுக்கு அன்பு செலுத்தினால் அவன் எதையாவது எதிர்பார்க்கிறான் அதனால் பிரச்சினை ஏற்படுகிறது என்று நாய், பூனை மேலே மனிதன் அளவுகடந்த பாசம் வைக்கிறான். ஏன் என்றால் அதற்கு இரண்டு பிஸ்கட் வாங்கி போட்டால் அதுபாட்டுக்கு பின்னாடியே வந்துவிட்டு போகிறது என்று நினைக்கிறார்கள். வேறு ஏதும் அது கேட்கபோவதில்லை.

இந்த காலத்தில் ஒரு தாய் தன் குழந்தை மேல் வைக்கும் அன்பு போல தான் நாம் கடவுள் மேல் அன்பு வைக்க வேண்டும்.

நீங்களே கோவிலுக்கு முதன் முதலாக செல்லும் போது எப்படி சென்று இருப்பீர்கள் .அன்போடு போயி இருப்பீர்களா கண்டிப்பாக இருக்காது எதோ அம்மா கூப்பிடுகிறால் அதனால் போகிறேன் என்று போயிருப்பீர்கள் அங்கு போய் ஒன்றும் கிடையாது ஏதோ பார்த்தோம் கும்பிட்டேன் ஒன்றும் தெரியவில்லை ஆனால் அங்கு உங்களுக்கு பிரசாதமாக பொங்கல் கொடுத்து இருப்பார்கள். அப்பொழுது கடவுள் ஏதோ ஒன்றை செய்கிறார்.

இவன் அடுத்ததடவை வருகிறானா என்று பார்ப்பதற்க்காக இருக்கும்.  அடுத்தடவை நீங்கள் அந்த பிரசாத்திற்க்காகவது கோவிலுக்கு செல்லுவீர்கள். அறிவோடு மட்டும் இருந்தால் நம்மால் முன்னேற முடியாது. அதற்கு மேல் நமக்கு விருப்பம் வேண்டும்.

தியானம் செய்யும் போது சொல்லுவார்கள் ஏதாவது ஒன்றை மனதில் நினைத்துக்கொண்டு தியானம் செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் நண்பரை நினைத்து அல்லது ஏதோ ஒரு பொருளை நினைத்து தியானம் செய்வீர்கள் உங்களுக்கு தியான செய்யும் போது பத்து நிமிடம் மட்டும் தியானம் செய்வீர்கள் ஏதோ மனது அமைதி அடைகிறது என்று நினைப்பீர்கள் ஆனால் அமைதி அடையாது ஏதும் நடைபெறாது. இது வறட்டு சிந்தனை.

நீங்கள் தியானம் செய்யும் போது உங்கள் நண்பருக்கு பதில் அல்லது ஒரு பொருளுக்கு பதில் அந்த இடத்தில் ராஜ அலங்காரத்தில் இருக்கும் ஒரு அம்மனை அல்லது சிவனை,பெருமாளை வைத்து பாருங்கள். அப்பொழுது அதன் அழகு உங்களை கவர்ந்து கொண்டு நாள்கள் ஆக ஆக அந்த சிந்தனை அன்பாக மாறிவிடும். இந்த தத்துவம் தான் சிலை வழிபாடு. அந்த சிலைகள் ராஜஅலங்காரம் செய்வதும் இந்த நோக்கத்தில் தான் இந்து மதத்தில் இருக்கிறது.

ஆண்கள் அறிவு நிறைந்தவர்கள் என்று சொல்வார்கள் ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை அந்த காலத்தில் சொல்லியுள்ளார்கள். பெண்கள் அன்புமயமானவர்கள் என்று சொல்லியுள்ளார்கள். சிந்தனையும் அன்பும் சேர்ந்தால் கடவுளை அடையலாம் என்று சொல்வார்கள். கடவுள் அன்பை மட்டும் தான் எதிர்பார்ப்பார்.

எத்தனை சிவனடியார்கள் இருந்தாலும் மிகவும் போற்றப்படுபவர் யார் என்றால் காரைக்கால் அம்மையார். இவர் ஒரு பெண் ஏன் இவரை அந்தளவுக்கு போற்றிகிறார்கள் என்றால் அறிவு மற்றும் அன்போடு சிவனை அடைந்தவர் அதனால் தான் அவருக்கு அவ்வளவு சிறப்பு. அவரின் அன்பைப்பற்றி ஒரு வரியில் சொல்லுவது என்றால் திருவாலங்காட்டில் அவர் கால் தடம்கூட படகூடாது என்று தன் தலையால் சென்று தரிசித்தவர் எத்தனை பேருக்கு இந்த அன்பு கலந்த பக்தி இருக்கும்.


இவரின் பக்திக்கு ஒரு செய்யுள் தருகிறேன் பாருங்கள்

அறிவானும் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே-அறிகின்ற
மெய்பொருளுந் தானே விரிசுடரபார் ஆகாயம்
அப்பொருளும் தானே அவன்.

அப்படி ஒரு பற்று வைத்தவர்.

அடுத்து வைணவத்தில் பார்த்தீர்கள் என்றால் ஆழ்வார்கள் பனிரெண்டு பேர் அதில் முதன்மையானவர் ஆண்டாள் இவர் ஒரு பெண். நீங்களே சொல்லுங்கள் ஏதாவது வைணவத்தில் ஒரு நூல் சொல்லுங்கள் என்று கேட்டாள் உடனே சொல்லுவீர்கள் திருப்பாவை என்று ஏன் அப்படி சொல்லுகிறீர்கள் என்றால் அது ஒரு பெண்ணால் பாடபெற்றது. பெருமாளே பல்லக்கு அனுப்பி அழைத்துவரப்பட்டவள் அந்தளவுக்கு கடவுளை அன்போடு பார்த்தவள்.

தொடக்கத்தில் அறிவு இருக்க வேண்டும் அதற்கு அடுத்தபடியாக அன்பு இருக்கவேண்டும் அப்படி இருந்தால் பக்தியோடு நீங்கள் கடவுளை சரணாகதி அடையலாம்.

இது எல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் அனைத்து மக்களுக்கும் பில்டிங் ஸ்ராங்க இருக்கு ஆனால் பேஸ்மண்ட்டு வீக்காக இருக்கு அதனால் இதனை சொன்னேன்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


2 comments:

R.Srishobana said...

வணக்கம் ஐயா,
இத்தகைய அரிய தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி...உபநிஷடுகளின் வாழ்வின் பல அரிய உன்னதமான நெறிகளை உணரலாம்...

rajeshsubbu said...

//* R.Srishobana said...
வணக்கம் ஐயா,
இத்தகைய அரிய தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி...உபநிஷடுகளின் வாழ்வின் பல அரிய உன்னதமான நெறிகளை உணரலாம்... *//

வருக வணக்கம் தங்களின் பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி