வழக்குகளில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் இந்த பதிவும் எனது அடுத்த பதிவில் இருந்து உங்களுக்கு பயன்படும் என்று தருகிறேன்.
முதலில் அழகான தெய்வ தரிசனம்.
பெருமாள் கோவில் தலைமை என்றால் அது ஸ்ரீரங்கத்தை தான் குறிக்கும். இதற்கு பிறகு தான் அனைத்து பெருமாள் கோவிலும் அப்படி சிறப்பு வாய்ந்த கோவிலின் பாடல்களை பார்க்கலாம்.
முதலில் அழகான தெய்வ தரிசனம்.
பெருமாள் கோவில் தலைமை என்றால் அது ஸ்ரீரங்கத்தை தான் குறிக்கும். இதற்கு பிறகு தான் அனைத்து பெருமாள் கோவிலும் அப்படி சிறப்பு வாய்ந்த கோவிலின் பாடல்களை பார்க்கலாம்.
பெரியாழ்வார் அருளிய பாசுரங்களின் எண்ணிக்கை 473. இந்த 473 பாசுரங்களுள் முதன்மையானதாக விளங்குவது "திருப்பல்லாண்டு" என்று அழைக்கப்படும் 12 பாசுரங்கள். திவ்ய பிரபந்தம் "தமிழ் வேதம்" என்று போற்றப் பெறுகிறது.
பெரியாழ்வார் பாடிய பாசுரங்கள் இது இந்த பாசுரம் எனக்கு பிடிக்கும். ஏன் இதை பிடிக்கும் என்று இப்பொழுது சொல்லுகிறேன் படித்தால் உங்களுக்கும் பிடிக்கும்.
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன்
சேவடி செவ்வி திருக்காப்பு.
மல்லர்களை அடக்கி ஆண்ட திடமான தோள்களை உடைய கிருஷ்ணா !
உன் சிவந்த பாதங்களின் அழகுக்கு என்றென்றும் ஒரு குறைவும் வராது இருக்க வாழ்த்துக்கள் !
ஒரே சமயத்தில் கண்ணன் திண்மையான(திடமான) தோள்களை உடையவனாகவும், மென்மையான பாதங்களை உடையவனாகவும் பெரியாழ்வாருக்கு காட்சி அளிக்கிறான். கண்ணன் திண்மையும் மென்மையும் ஒருங்கே அமைந்தவன்.
.
மல்லாண்ட அப்படினா என்ன அர்த்தம் என்றால்
"என்றென்றும்" என்ற பொருள் தொனிக்கும்படி, பல ஆண்டுகள், பல ஆயிரம் ஆண்டுகள், பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் என்று ஆழ்வார் சொல்லிக்கொண்டே போகிறார் எப்படி ஒரு பாசமான பக்தி இருந்தால் இப்படி எழுதமுடியும் என்று பாருங்கள்.
இரண்டாவது பாசுரங்கள்
பெரியாழ்வார் திருமொழி 2
அடியோமோடும் நின்னோடும்
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு வடிவாய் நின் வல மார்பினில்
வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும்
சுடராழியும் பல்லாண்டு
படை போர் புக்கு முழங்கும்
அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.
[விளக்கம்]
(கிருஷ்ணா!) நீயும் உன் பக்தர்களும் என்றும் கூடியே இருக்க வாழ்த்துக்கள்! உனது வலது மார்பினில் அழகாய் குடி கொண்டிருக்கும் லக்ஷ்மி பிராட்டிக்கு ஒரு குறைவும் ஏற்படாதிருக்க வாழ்த்துக்கள் ! அழகிய வடிவுடன் சுடர் விட்டு ப்ரகாசிக்கும் உனது வலது கை சக்கரத்திற்கும் ஒரு குறைவும் வராது இருக்க வாழ்த்துக்கள் ! போர் களத்தில் ஆயுதமாய் புகுந்து எதிரிகளை நடுங்க செய்யும் பாஞ்சஜன்யம் என்கின்ற உனது சங்கும் என்றும் ஒரு குறைவும் இன்றி இருக்க வாழ்த்துக்கள் !
மகாபாரத யுத்தத்தில் கண்ணன் தன்னுடைய பாஞ்சசன்னியத்தை எடுத்து கம்பீரமாக முழங்க, அந்த இடி போன்ற முழக்கத்தை கேட்டே கௌரவ சேனையினர் துணிவை இழந்து மனச்சோர்வை எய்தினர்.
இன்றைக்கு நமக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க நம்மால் முடியாமல் போனால் அதற்கு பெருமாளின் கோவிலில் போய் கைகளில் பாஞ்சசன்னியத்தை வரைந்து அதற்கு சக்தியை கொடுத்து நமது பிரச்சினைகளை தீர்க்க அந்த சக்தி நமக்கு கிடைக்கும். பெரும் பாலும் சண்டை சச்சரவு ஏற்பட்டால் அதனை தீர்ப்பதற்க்கு அல்லது வழக்குகளில் வெற்றி பெறுவதற்க்கு இதனை செய்வார்கள். நான் தஞ்சாவூர் பகுதியில் பார்த்து இருக்கிறேன்.
இப்பொழுது இதனை பெருமாள் கோவில் செய்கிறார்களா என்று தெரியவில்லை. நாம் இதனை பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. உங்களின் ஊர்களில் செய்தால் தெரியபடுத்தவும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
வணக்கம் ஐயா,
பாஞ்சசன்னியம் என்றால் என்ன?...வலம்புரி சங்கை தான் அவ்வாறு அழைப்பார்களா?...மன்னிக்கவும் எனக்கு பொருள் விளங்க்வில்லை...
//* R.Srishobana said...
வணக்கம் ஐயா,
பாஞ்சசன்னியம் என்றால் என்ன?...வலம்புரி சங்கை தான் அவ்வாறு அழைப்பார்களா?...மன்னிக்கவும் எனக்கு பொருள் விளங்க்வில்லை... *//
வருக வணக்கம் சங்கு தான் அது. தங்களின் வேண்டுகோளுக்காக ஆன்மிக கட்டுரை தருகிறேன். உங்களைப் பற்றிய விபரங்களை எனக்கு அனுப்பமுடியுமா?
Post a Comment