வணக்கம் நண்பர்களே இப்பதிவில் திருமணமும் வில்லனும் பற்றி பார்த்துவிடலாம். திருமண வாழ்க்கையில் கஷ்டத்தை இழப்பை தருவது இந்த விசயத்தில் தான் அதிகம் இருக்கும். இழப்பு என்றால் பிரிந்து செல்லுவது. வில்லன் என்பது ஆறாவது வீடு தான். ஒவ்வொரு வீட்டிற்க்கும் விரையவீடு என்பது அந்த வீட்டிற்க்கு முன் உள்ள வீடு. திருமண வீட்டிற்க்கு முன் வீடு அதாவது ஏழாவது வீட்டிற்க்கு முன் வீடு ஆறாவது வீடு. விரையமும் வில்லனும் சேர்ந்தால் எப்படி வாழ்க்கை இருக்கும்.
திருமண நடைபெறாமல் இருந்தாலும் பிரச்சினை தான் திருமணம் எளிதில் நடைபெறாது திருமணம் நடைபெற்று இருந்தாலும் பிரச்சினை தான் இரண்டு விதத்திலும் பிரச்சினையை உருவாக்குவதில் வல்லவராக இந்த ஆறாவது வீடு விளங்குகிறது.
ஆசையாக வளர்த்த பெண்ணை கஷ்டப்பட்டு கட்டிக்கொடுத்தால் அவன் இவளை உண்டு இல்லை என்று செய்துவிட்டு கடைசியில் கோர்ட் கேஸ் என்று அலைய வைத்து பெண்ணின் வாழ்க்கையும் கெடுத்து இவர்களின் குடும்பமானத்தையும் ஊர் பார்த்து சிரிக்க வைப்பதும் இந்த ஆறாம் வீட்டால் தான் இருக்கும்.
ஆண்களின் வாழ்க்கையிலும் இந்த ஆறாவது வீடு எக்கசக்கமாக வேலை செய்யும். ஏழாம் அதிபதி ஆறாவது வீட்டில் இருந்தால் மாமனரின் வீட்டில் சம்பளம் இல்லாத ஒரு வேலைகாரன் இருக்கிறான் என்று மாமனாரின் வீட்டில் வேலை செய்துக்கொண்டு அடிமைப்போல் இருப்பான்.
ஏழாவது வீட்டு அதிபதி ஆறாம் வீட்டில் இருந்தால் உங்களின் துணைவர் உங்கள் வீட்டு வேலைகாரருடன் தொடர்பு இருக்கும். இந்த அமைப்பு இருந்தால் வேலைக்காரரின் விசயத்தில் உஷாராக இருப்பது நல்லது.
ஏழாவது வீட்டு அதிபதி ஆறாம் வீட்டில் இருந்து அதனை சனி கிரகம் பார்த்தால் உங்களுக்கு தெரியாமல் உங்களின் துணை ஊரை சுற்றிவிட்டு வருவார் உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது.
திருமண வாழ்வில் பிரிவை தருவது இந்த ஆறாவது வடு தான் முக்கியபங்கு பெறுகிறது. ஆறாவது வீட்டில் ஏழாவது வீடு சம்பந்தப்பட்டால் உங்களின் திருமண வாழ்வில் பிரச்சினை வரும். இந்த அமைப்பு இருக்கும் பட்சத்தில் நீங்கள் பொறுமையாக போவது நன்மையளிக்கும் முடிந்தவரை கூட்டு குடும்பமாக இருப்பது நல்லது. வீட்டில் பெரியவர்களை வைத்துக்கொள்வது நல்லது. பரிகாரம் எல்லாம் செய்வது இரண்டாம் பட்சமாக தான் இருக்கும்.
உங்களின் துணைவர் ஏதாவது பேசினால் நீங்களும் ஏட்டிக்கு போட்டியாக பேசாதீர்கள். அமைதியாக இருங்கள் நமது கிரகநிலை இவ்வாறு வேலை செய்கிறது அதனால் பேசிகிறார் என்று நீங்கள் நினைத்தால் உங்களின் திருமண வாழ்வில் நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
hello sir..7 ahm veettu athipathiyum 6 ahm veettu athipathiyum seanthu irunthaal yeppidi pirivu varumaa???
yethanaal pirivu varum????
Post a Comment