நீங்கள் தெய்வத்தன்மையுடன் வாழ்நாட்களில் வாழ்ந்து இறந்தால் அவர்கள் செல்லும் லோகங்களை அருணாசல புராணம் நமக்கு வழிகாட்டுகிறது. என்னடா புராணம் அது இது என்று உயிர் எடுக்கிறானே என்று நினைக்காதீர்கள். எனது வேறு பதிவில் இருந்து தருகிறேன்.
நான் இளம்வயதில் தனிமையான வாழ்வு தான் வாழ்ந்தேன் அப்பொழுது எனக்கு மிகவும் கை கொடுத்தது இந்த மாதிரி புத்தகங்கள் தான். எவ்வளவோ புத்தகங்கள் படித்து உள்ளேன். அப்பொழுது நான் நூலகங்கள் சென்று புத்தகங்களை படிப்பது உண்டு ஆனால் நூலகங்களில் உறுப்பினர் கிடையாது அங்கேயே படிப்பது எனது வழக்கம்.
சரியாக 1 மணி நேரத்தில் 100 பக்கங்களை படிப்பேன். அதை படித்துமுடித்துவிட்டு குறைந்தது 75 பக்கங்களை அப்படியே சொல்லிவிடும் ஞாபகம் இருந்தது ஆனால் இன்று அப்படி கிடையாது. புத்தகங்கள் படிப்பதை விட்டுவிட்டேன் என்றே சொல்லலாம்.
அந்த கதை இப்பொழுது வேண்டாம் விசயத்திற்க்கு வருவோம்.
1100 புராணங்களுக்கு மேல் படித்து உள்ளேன். புராணங்கள் மட்டும் இல்லை எல்லாத்தையும் தான் படித்தேன். அருணாசல புராணத்தில் ஒரு பாடலை தருகிறேன்.
மதமூன்று மாறக வருங்களிற்று முகத்தானை மனத்தினி லேதான்
பதமூன்று மருந்தவர்க்குப் பதமூன்றுங் கடந்தபதம் பாலிப் பானை
விதமூன்று பரங்கடிந்தா ரளித்தருளு வேரோ டேசஞ்
சிதமூன்று பிறப்பொழிக்கு மானைதிறை கொண்டவனைச் சிந்தை சேர்ப்பாம்.
இந்த பாடலின் பொருள்
மும் மதங்களும் ஆறாகி ஒடிவருகின்ற யானை முகமுள்ள வரும் மனதில் தம்முடைய திருவடிகளை நாட்டிச் சிந்திக்கின்ற அரிய தவத்தையுடையவர்களுக்குச் சாலோகம், சாமீபம், சாரூபம் என்னும் மூன்று பதங்களுக்கும் மேற்பட்ட நான்காம் பதமாகிய சாயுச்சியத்தைக் கொடுப்பவரும் முப்புரத்தை நீறு செய்த சிவபெருமானீன்றருளிய ஒப்பற்ற முதல் கடவுளும், சஞ்சிதம் பிராரத்தம், ஆகாமிய மென்னும் மூவகைப்பட்ட வினைகாரணமாக உண்டாகும் பிறவித் துன்பத்தை யடியோடு நீக்குபவருமாகிய யானை திறை கொண்டவரென்னும் விநாயகக் கடவுளை மனத்தில் சேர்த்துக் கொள்வோம்.
சாலோகம் என்பது சாமியின் லோகத்தில் வாழ்வது சாமீபம் என்பது சாமியின் சமீபத்தில் வாழ்வது. சாரூபம் என்பது சாமியின் ரூபமாக மாறுவது சாயுச்சம் என்பது சாமியாகவே மாறிவிடுவது சாமியுடன் இரண்டற கலப்பது.
கர்ணனுக்கு இந்த சாயுச்சம் என்னும் நான்காம் பதவி அருளி தன்னுடனே இணைத்துக்கொண்டார்.
கர்ணனுக்கு இந்த நான்காவது பதவி கிடைத்தது. எப்படி என்று பார்க்கலாம்.
பாரதம் கன்னபருவம் 81
"ஓவிலா தியான்செய் புண்ணிய மனைத்தும் உதவினேன் கொள்கநீ"
கிருஷ்ணன் கர்ணனிடம் நீ செய்த புண்ணியம் செய்கின்ற புண்ணியம் செய்யபோகின்ற புண்ணியம் அனைத்தையும் தரவேண்டும் என்று கேட்டவுடன் கர்ணன் அதை உடனே தந்துவிடுகிறார்.
எப்படிப்பட்ட மனநிலை இருந்தால் இதனை செய்திருப்பார் என்று பாருங்கள் அதனால் கிருஷ்ணன் கர்ணனுக்கு நான்காவது பதவியை தந்து அருளினார். புராணங்களை படிப்பது வெறும் கதைக்காக இல்லாமல் அதில் உள்ள கருத்துக்களை பார்த்தால் எடுத்துக்கொள்வதற்க்கு எவ்வளவோ வழிகள் அதில் இருக்கின்றன்.
இது எல்லாம் ஆய்வு செய்து அரசாங்கத்தால் பட்டம் வாங்கியவர்கள் எடுத்துக்கொண்ட தலைப்புகள் அவர்கள் அனைவரும் எனக்கு நன்றாக தெரிந்தவர்கள். அவர்கள் எந்த பல்கலைகக் கழகத்தில் வாங்கியவர்கள் என்பது எல்லாம் என்னுடைய பதிவுகளில் எழுதியுள்ளேன். அவர்களுக்கு என்னுடைய உதவிகளும் இருக்கின்றன. நான் பள்ளிப்படிப்பை கூட தாண்டவில்லை நமக்கும் அதுக்கும் ஒத்துவராது.
நீங்களும் இதில் ஆராய்ச்சி செய்பவர்கள் என்றால் என்னை தொடர்புக்கொள்ளலாம் பணம் கேட்கமாட்டேன். அனைத்தும் இலவச சேவை.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
வணக்கம் ஐயா,
நல்ல அருமையான பதிவு...இவ்வளவு ஆளமான சிந்தனைகளை கொண்டுள்ளீர்கள்,பள்ளி படிப்பை முடிக்கவில்லை என்பதனை நம்பமுடியவில்லை...வாழ்க்கை பாடம் தான் மிகப் பெரிய கல்வி என்று நிரூபித்துள்ளீர்கள்...
என் சிறிய வேண்டுகோள்,தயவு செய்து ஆன்மிக கட்டுரைகளையும் இதே பதிவில் பதிவிட்டால் என் போன்றவர்களும் பயனடைவார்களே...நன்றி...
Post a Comment