வணக்கம்!
நமக்கு ஏன் ஒன்றும் நல்லதாக நடக்கவில்லை என்றால் நாம் வைத்துள்ள அவநம்பிக்கை தான் காரணமாக இருக்கமுடியும். நான் அம்மனிடம் வேண்டுதல் வையுங்கள் என்று சொல்லுவேன். ஒரு தடவை வேண்டிப்பார்ப்பார்கள். நடக்கவில்லை என்றவுடன் அடுத்த தடவை அப்படியே விட்டுவிடுவார்கள். இலவசமாக வேண்டிக்கொள்வதில் என்ன நஷ்டம் வந்துவிடபோகின்றது. சரி இதனை விடலாம்.
நம்ம மனது நம்மளை ஏமாற்றிவிடும். உண்மையை சொன்னால் இதனை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நாம் பிறரை குறைச்சொல்லிக்கொண்டிருப்போமே தவிர நமது மனதால் தான் நாம் இந்த நிலையில் இருக்கின்றோம் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை.
ஒரு நல்ல நம்பிக்கையை அதாவது நேர்மறையான நம்பிக்கையை வைத்துக்கொண்டு செயல்படுவதில்லை. எப்படியும் நடந்துவிடும் என்ற நம்பிக்கையை வைப்பதற்க்கு பதில் எப்படியும் இது நடக்காது என்று நாம் நினைப்பதால் முக்கால்வாசி வெற்றி தோல்வியாக மாறிவிடுகிறது.
அஷ்டமசனி நடந்தாலும் சரி ஏழரை சனி நடந்தாலும் சரி வேறு கிரக பாதிப்பு வந்தாலும் சரி நமது குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வம் நம்மை காப்பாற்றும் என்ற மனஉறுதி இருந்தால் வெற்றி பெற்றுவிடலாம்.
முக்கியமான ஒரு தகவலை பகிர்கிறேன். எனக்கு ஏதாவது தேவைப்பட்டால் நான் முதலில் கோவிலுக்கு எல்லாம் செய்துவிடுவேன். என்னால் முடிந்த உதவியை செய்துவிட்டு அந்த காரியத்திற்க்காக காத்திருப்பேன். அந்த காரியம் எப்படியும் வெற்றி பெற்றுவிடும். இதனை நீங்களும் செய்யலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Ithu unmai.naan anupavithirukkiren.
Post a Comment