Followers

Wednesday, January 2, 2013

பூர்வ புண்ணியம் 10



வணக்கம் நண்பர்களே !

கடந்த இரண்டு நாட்களாக பூர்வபுண்ணியத்தைப்பற்றி அதிகபதிவுகள் எழுதுவதால் இதைப்பற்றி தான் அதிக போன்கால்கள் வந்தவண்ணம் உள்ளன. ஒவ்வொருவரும் போன் செய்து பாராட்டினார்கள்  இப்பதிவும் பூர்வபுண்ணியத்தைப்பற்றி தான் வருகிறது படித்து பாருங்கள்.

ஒருவருக்கு பூர்வபுண்ணியாதிபதி தசா நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு பூர்வபுண்ணியம் நன்றாக இருக்கிறதா என்று தெரிந்துக்கொள்ள ஒரு வழி இருக்கிறது அது என்ன என்றால் அவர் வேலை செய்யமாட்டார். வேலைக்கு சென்றாலும் எப்படா இந்த வேலையை விட்டு செல்லலாம் என்ற மனநிலை ஏற்படும்.

ஐந்தாம் வீட்டு தசா நடந்தால் பெரும்பாலும் அவர்கள் உட்கார்ந்துக்கொண்டு சாப்பிடும் நிலை ஏற்படும். சுகவாழ்வு என்று சொல்வார்களே அந்த வாழ்க்கையை கொடுத்தால் மட்டுமே பூர்வபுண்ணியம் நன்றாக இருக்கிறது என்று சொல்லலாம். பெரும்பாலும் ஆன்மீகவாதிகளை பார்த்தால் ஊரில் உள்ளவனோட காசில் சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். அமைதியாக உட்கார்ந்துக்கொண்டு கடவுளைப்பற்றி சிந்திப்பது தான் இவர்களின் வேலை. தியானம் என்றால் தனியாக உட்கார்ந்துக்கொண்டு இருப்பது தானே வேறு என்ன இது தான் வேலை. எங்கேயாவது இருந்து பணம் வந்துவிடும். இது ஐந்தாம் வீட்டுக்கு மட்டும் இல்லை ஒன்பதாவது வீட்டு தசா மற்றும் குரு தசாவிலும் நடைபெறும்.

ஐந்தாவது வீட்டு தசா நடந்து நீங்கள் வேலையில் அதிக ஈடுபாடு காட்டிக்கொண்டிருந்தால் தயவு செய்து ஆன்மீக பக்கம் செல்லவேண்டாம். ஏன் என்றால் பூர்வபுண்ணியம் உங்களுக்கு நன்றாக இல்லை என்று சோதிடரை பார்க்காமலே நீங்களே தெரிந்துகொள்ளலாம்.

எனக்கு குரு தசா சுயபுத்தியில் கஷ்டம் ஏற்பட்டது அதன் பிறகு எனக்கு வேலை செய்யபிடிக்கவில்லை வேலைக்கே போவதில்லை. இப்பொழுது சோதிடம் பார்ப்பது சாமியார்களை சந்திப்பது இப்படி தான் போய்க்கொண்டு இருக்கிறது. பணம் எங்கிருந்தும் கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறது.  இப்படி இருந்தால் நீங்கள் தான் ஆன்மீக பயிற்சியை பெறவேண்டும்.

ஆன்மீகம் என்பதும் சுகவாழ்வு என்பதும் அவ்வளவு ஒற்றுமை. இவர்கள் செய்யும் வேலை எல்லாம் பார்த்தீர்கள் என்றால் ஆன்மீகவிசயங்கள் பேசுவது கோவிலுக்கு செல்லுவது தியானம் செய்வது மந்திரம் படிப்பது இப்படி இருப்பார்கள்.ஐந்தாவது வீட்டு அதிபதி தசாவில் உங்களின் உடல்உழைப்பு இருக்காது. பணத்தின் மீது ஆசை ஏற்படாது ஆனால் பணம் உங்களை தேடி வரும் உங்களின் பூர்வபுண்ணியம் எப்படி இருக்கிறது என்று தெரிந்துவிட்டதா.


நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: