Followers

Thursday, January 3, 2013

பூர்வ புண்ணியம் 12



ணக்கம் ண்பர்களே!
                               பூர்வ புண்ணிய தொடரில் ஒரு சில கருத்துக்களை பார்க்கலாம். 

ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணியத்தை காட்டும் இடம் என்பது ஐந்தாம் இடம் என்று அனைவருக்கும் தெரியும். ஐந்தாம் இடத்தில் தீயகிரகங்கள் அமர்ந்தால் மிகப்பெரிய பிரச்சினை அந்த ஜாதகருக்கு கொடுத்துவிடும். இதனை பார்த்து தான் நாம் பூர்வபுண்ணியம் சரி இல்லை என்று சொல்லுகிறோம். 

ஐந்தாம் இடத்தில் இருக்கும் தீயகிரகங்கள் ஒரு வேளை ஆறாம் வீட்டில் இருந்தால் உங்களுக்கு அந்த கிரகங்கள் ராஜயோகத்தை தரும் என்று நீங்கள் படித்து இருக்கீறீர்களா. எந்த தீயகிரகமும் ஆறாம் வீட்டில் இருந்தால் அதிகபட்சமாக ராஜயோகத்தை வழங்கிவிடும். 

எடுத்துக்காட்டாக ஐந்தாம் வீட்டில் சனி கிரகம் இருந்தால் அந்த ஜாதகரின் பாடு திண்டாட்டம் அதே ஜாதகருக்கு சனி கிரகம் ஆறாம் வீட்டில் இருந்தால் எவ்வளவு ராஜயோகம் தெரியுமா. பரம்பரை பணக்காரனாக இருப்பார்கள். பணம் எவ்வளவு எடுத்து செலவு செய்தாலும் குறையவே குறையாது. அப்படியோரு ராஜயோகம் அமையும். 

நீங்கள் ஒன்றை நினைத்து பாருங்கள் இந்த ஐந்தில் இருக்கும் சனிகிரகத்தை ஆறாம் வீட்டில் இருந்து பலன் கொடுப்பதுபோல் மாற்றினால் எப்படி இருக்கும். நீங்கள் நினைக்கலாம் ராஜேஷ்க்கு பைத்தியம் முத்திவிட்டதுடா என்று நினைக்கலாம். சும்மா நினைத்து பாருங்கள் அப்படி செயல்படுத்தமுடியுமா என்று பாருங்கள்.

நாம சோதிடம் பார்க்கும்போது சொல்லுவோம் சந்திரன் உங்களுக்கு மேஷத்தில் நிற்கிறான் என்று சொல்லுவோம் சனி உங்களுக்கு துலாத்தில் நிற்கிறான் என்று சொல்லுவோம் உண்மையில் என்றைக்காவது ஒரு கிரகம் நிற்க்குமா அது சென்றுக்கொண்டே இருக்கும் யாருக்கும் நிற்காது எந்த இடத்திலும் நிற்காது ஆனால் நாம் என்ன சொல்லிக்கொண்டு இருப்போம். சந்திரன் இங்கு நிற்கிறது என்று சொல்லுவோம். சந்திரன் அல்லது சனி சென்றுக்கொண்டு இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். 

நீங்கள் நினைத்து பாருங்கள் ஐந்தில் இருந்து நமக்கு தொந்தரவை கொடுக்கும் கிரகத்தை ஆறில் இருந்து நமக்கு பலன் தருவது போல் மாற்றினால் எப்படி இருக்கும். நீங்கள் கிரகத்தை மாற்றவேண்டாம் ஆறில் இருந்து பலன் தருவது போல் செய்தால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் யோசனை செய்து பாருங்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Unknown said...

நான் ஒரு ஐந்து கோடி இந்த ஒரு வருசத்துல சம்பாதிக்க என் பலன மாத்துங்க...உங்களுக்கு 40% தந்திடுரன்...he he he :P :)