Followers

Monday, January 28, 2013

மகரம்: ஐந்தில் சனி



ணக்கம் ண்பர்களே !

பூர்வ புண்ணியத்தில் வித்தியாசமாக சோதிடம் மூலம் பூர்வபுண்ணியத்தை பார்த்து வருகிறோம் அதில் மகரத்திற்க்கு ஐந்தாம் இடத்தில் சனி அமர்ந்தால் என்ன முன்ஜென்மத்தில் செய்திருப்பார் என்று இப்பதிவில் பார்க்கலாம். 

மகரராசியின் அதிபதி சனி தான் அதனால் அவர் ஏதும் செய்யமாட்டார் என்ற நோக்கத்தில் பார்த்தால் நமக்கு சிக்கல் தான் வரும். ஏன் என்றால் அவர் யாரையும் எதற்க்காகவும் விட்டுவைப்பதில்லை சொல்லபோனால் நூறு சதவீதம் சரியாக தன் வேலையை செய்வதில் அவருக்கு நிகர் அவர் தான். அதனால் உங்களின் லக்கனாதிபதி ஐந்தாம் வீட்டில் அமருக்கிறார். 

லக்கினாதிபதி ஐந்தில் அமருவது யோகம் தான் என்று நினைப்போம் ஆனால் அவர் அது மட்டும் தான் செய்வாரா அல்லது வேறு ஏதாவது செய்வாரா என்று பார்க்கலாம்.

ஐந்தாம் இடம் ரிஷபம். ரிஷபத்தில் அமருவதால் சனி நட்பாக தான் அமருவார். மகரத்திற்க்கு சனி லக்கனத்திற்க்கு அதிபதி மற்றும் குடும்பஸ்தான அதிபதி. இவர் முன்ஜென்மத்தில் தானும் கெட்டு தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களையும் கெடுத்து இருப்பார்.

எதனால் கெடுத்து இருப்பார் ?

ஐந்தாம் இடம் சுக்கிரனின் இடம் பெண்களால் குடும்பத்தை காலி செய்து இருப்பார். காதல் வயப்பட்டு அதற்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் அவரின் குடும்பத்தையே காலி செய்திருப்பார். விட்ட குறை தொட்ட குறை என்று இந்த ஜென்மத்திலும் அதே போல் தொடரும். சுக்கிரன் வீடு சம்பந்தப்பட்டால் பெண்களுக்கு கடுமையான தீங்கு விளைத்திருப்பார். அதனாலும் இந்த பூர்வ புண்ணியம் கெடுதலை செய்திருக்கும்.

இதற்கு என்ன பரிகாரம்?

பெண்களை தெய்வமாக பார்க்க வேண்டியது முதல் கடமை. எப்படி ஐந்தில் சனி இருக்கும்போது தெய்வமாக பார்க்க தோன்றும் பிரச்சினையை அங்கு தான் ஆரம்பம். 

காதல் செய்யாமல் இருக்கவேண்டியது இரண்டாவது பரிகாரம். காதலை காட்டும் இடம் அது கூட சுக்கிரனின் வீடு கண்டிப்பாக மனது அலைபாயும். 

உங்களுக்கு நீங்களே பரிகாரம் செய்துகொள்வது ஏன் என்றால் நீங்களே முன்ஜென்மத்தில் அடுத்தவரை கொலை செய்து நீங்களும் தற்கொலை செய்துக்கொண்டு இருக்கலாம். உங்களின் உடலை ஒரு தெய்வ உடல் போல் பாவித்து அந்த உடலை நன்றான முறையில் பேணிக்காப்பது. 

அடுத்த பரிகாரம் உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை உங்களின் பொறுப்பில் கவனித்து அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுப்பது ஒரு நல்ல தீர்வாகும்.

மேலும் விளக்கம்

மனித வாழ்க்கையில் முன்ஜென்மத்தில் ஏற்பட்ட கர்மவினையை தொலைப்பதற்க்கு ஒரு வாய்ப்பை கடவுள் மனிதனுக்கு தருகிறார் அதனை நீங்கள் நன்றாக பயன்படுத்தி முன்ஜென்மத்தின் கர்மாவை தொலைக்க பாருங்கள். சம்பந்தப்பட்ட நபரை நீங்கள் அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவுவது வழியாக தான் கர்மாவை குறைக்க முடியும் என்பதை நீங்கள் முதலில் நினைவில் வையுங்கள். இதனை விட்டுவிட்டால் உங்களை கடவுளால் கூட காப்பாற்றமுடியாது

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 



1 comment:

KJ said...

Sir, thanks.. Also pl continue abt 5th place dasa for all rasi.