வணக்கம் நண்பர்களே!
இன்று காலை ஒரு பதிவில் சொல்லிருந்தேன். எனது மாணவர் ஒருவருக்கும் எனக்கும் நடந்த உரையாடலை தருகிறேன் என்றேன் அந்த உரையாடலை அப்படியே தருகிறேன் படித்து பாருங்கள். இந்த பதிவு ஆன்மீகதாகம் இருப்பவர்களுக்கு மட்டுமே பிடிக்கும். ஆன்மீகதாகம் இல்லாதவர்கள் பதிவை படிக்கவேண்டாம்.
மாணவர் :வணக்கம் ராஜேஷ்
நான் :வணக்கம் கடவுளையே நான் கொண்டுவந்து காண்பித்தாலும் என்னை ராஜேஷ் என்று தான் கூப்பிடுகிறீர்கள். குரு என்று சொல்லகூடாதா ?
மாணவர் : உங்களை குருவாக ஏற்றுக்கொள்ளமுடியாது நண்பனாக ஏற்றுக்கொண்டுவிட்டேன்.
நான்: பரவாயில்லை. முதலில் நான் கெட்டப்பை மாற்றவேண்டும். சொல்லுங்கள்.
மாணவர் : கர்மபந்தம் என்றால் என்ன?
நான் : பரவாயில்லையே நீங்கள். கடுமையான கேள்வியை என்னிடம் கேட்க ஆரம்பித்துவிட்டீர்களே .
முன் பல பிறவிகளில் செய்த நல்லதும் தீயதுமான வினைகளின் ஸமஸ்காரத்தினால் இந்த ஜூவன் பந்தப்பட்டுருக்கிறது.
ஒருவர் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் இந்த பிறவியில் எந்த கெடுதலும் செய்யவில்லை அப்படி இருந்தும் அவர் மோசமான நோயால் பாதிக்கப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
எப்படி இந்த பாதிப்பு அவருக்கு ஏற்பட்டது இந்த பிறவியில் உனக்கு தெரிந்தவரை தவறு செய்யவில்லை என்று தெரிகிறது ஆனால் அவர் கஷ்டபடுகிறார். அப்பொழுது இவர் முற்பிறவியில் செய்த தீவினைகள் தொடர்கிறது என்று வைத்துக்கொள்ளலாம்.
ஒரு மனிதன் எவ்வளவு தான் கொடுமையானவனாக இருந்தாலும் யாருக்காவது ஒருவருக்கு நன்மை செய்திருப்பான் அப்படி இல்லை என்றாலும் அவனின் மனைவியாவது காப்பாற்றி இருப்பான் அல்லவா அந்த நன்மை அவனுக்கு இன்று படுப்பதற்க்கு ஒரு அரசுமருத்துவமனையாவது கிடைத்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம்.
இந்த மனிதப்பிறவியிலும் அஹங்காரம் மமகாரம் பற்றுதல் பயனில் ஆசை இவற்றால் மேலும் பல புதிய கர்மங்களைச் செய்வதால் இந்த பந்தம் மேலும் வலுப்பெறுகிறது. இந்த ஜீவன் மேலும் பிறப்பு இறப்பு என்ற சூழலில் உழலுவதல் காரணமாக பல முன் பிறவிகளில் சேர்ந்த நல்லதும் தீயதுமான ஸமஸ்காரத் (வினைகளின்) தொகுப்பையே கர்மபந்தம் என்கிறார்கள்.
கர்மயோகத்தின் முறையில் எல்லாக் கர்மங்களிலும், மமகாரம், பற்று பயனில் உள்ள ஆசை இவற்றை விட்டு கர்மம் சரியான பயன் தருமா தராதா கவலைவிட்டு ஸமபாவனையுடன் விருப்பு வெறுப்பு மகிழ்ச்சி துன்பம் முதலிய விகாரங்களுக்குட்படாமல் கடமையை செய்யவேண்டும்.
மாணவர் : என்னால் சாமியார் போல் ஆகாமுடியாது எவன் நமக்கு உள்ள அடிப்படை உரிமைகளை செய்வது எப்படி வாழ்வது?
நான் :உன்னை எவன் சாமியாராக போகசொன்னது தெரிந்துக்கொள். நான் சொல்லுவது பகவத்கீதையில் இருக்கிறது இந்த கீதையே ஒரு இல்லறத்தில் இருப்பவனுக்கு தான் முதலில் உபதேசிக்கப்பட்டது அதனால் நீ பயப்படாமல் கேட்டுக்கொள்ளலாம்.
இப்படிச் செய்தால் இப்பிறவியிலும் பல முன் பிறவிகளிலும் செய்த கர்மங்களுக்கும் இனிமேல் செய்யப்போகும் கர்மங்களுக்கும் பயனை உண்டாக்கும் பிறகே அழிந்துவிடுகிறது.
அனைத்தும் அழிந்துவிட்ட பிறகு நீ கடவுளை சரணடையலாம்.
வறுக்கப்பட்ட தானியங்கள் முளைவிடாது. எல்லா விருப்பமும் நிறைவேறிய பிறகு மறுபடி ஆத்மா பிறப்பு எடுக்காது.
உன்னுடைய விருப்பங்கள் நிறைவேறிய பிறகு தான் ஆத்மாவிற்க்கு மோட்சம் என்பது கிடைக்கும். அது வரை கிடைக்காது.
மாணவர்: காசியில் இறந்தால் மோட்சம் கிடைத்துவிடுகிறது என்று சொல்லுகிறார்களே அப்ப அந்த ஆத்மாவிற்க்கு அனைத்து விருப்பமும் கிடைத்துவிட்டதா
நான் : உன்னை மாதிரி ஒரு ஆள் இப்படி கேள்வி கேட்டால் ஒரு சாமியாரும் பிழைப்பு நடத்தமுடியாது.
உரையாடல் தொடரும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment