வணக்கம் நண்பர்களே !
பூர்வ புண்ணியபகுதியில் சோதிடம் வழியாக நாம் ஒவ்வொரு லக்கனத்திற்க்கும் முன்ஜென்மத்தைபப்ற்றி பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இப்பதிவில் கும்ப லக்கனத்திற்க்கு ஐந்தில் சனி நின்றால் என்ன பலன் என்று இப்பதிவில் பார்க்கலாம்
கும்ப ராசியின் அதிபதி சனி தான் அவர் ஐந்தில் போய் நின்றால் கும்ப ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது மிதுனம் அதன் அதிபதி புதன். புதனின் வீட்டில் சனி நிற்கிறார். சனி மிதுனத்தில் நட்பாக நிற்கிறார்.
கும்பராசியின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட் லக்கினாதிபதியே விரையாதிபதியாக வருகிறார். இவர் தானும் கெட்டு தன்னுடன் தொடர்புடைய பெண்களையும் கெடுத்து இருப்பார். எப்படி என்றால் விரையாதிபதியின் மூலமாக பெண்கள் தொடர்பு ஏற்பட்டு இருக்கும் அவர்களை இவர் கெடுத்து இருப்பார்.
யாரை கெடுத்து இருப்பார்?
என்ன வீட்டில் வேலை பார்த்த பெண்களை தன்னுடைய ஜாதியில் இருந்து கீழ் ஜாதியின் பெண்களை கெடுத்து இருப்பார். எப்படி அவர்களை கெடுத்து இருப்பார் என்றால் நயவஞ்சகமாக பேசி அவர்களை இவர் பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கையில் விளையாடி இருப்பார்.
எப்படி சொல்லுகிறீர்கள்?
புதன் கிரகம் இரட்டை வேடம் போடும் கிரகம் நயவஞ்சகமாக பேசி காரியத்தை முடிப்பதில் புதனுக்கு ஈடு புதன் தான். சனி யாரோடு நட்பாக இருக்கிறார் பார்த்தீர்களா புதன்னோடு நட்பாக இருக்கிறார் அதனால் இவர்கள் நரி வேலை செய்தே அடுத்த குடியை கெடுத்து இருக்ககூடும்.
பரிகாரம் என்ன?
அனைத்திற்க்கும் பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் உங்களோடு தான் கண்டிப்பாக இருப்பார் அவரை அடையாளம் கண்டுக்கொண்டு அவருக்கு உதவி செய்வது தான் முதல் பரிகாரமாக அனைத்திற்க்கும் இருக்கும் என்பதை முதலில் நினைவில் வையுங்கள்
உங்கள் வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தால் அவர்களும் உங்களில் ஒருவர் என்று நினைத்து அவர்களுக்கு நீங்கள் உதவி செய்யுங்கள். சில நேரம் அவர்கள் கூட அந்த நபராக இருக்ககூடும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு நீங்கள் செய்தால் கண்டிப்பாக நீங்கள் பிறவிகடலில் இருந்து தப்பிக்க கூடும்.
மேலும் விளக்கம்
நீங்கள் ஏன் கோவில்களை பரிந்துரைக்கவில்லை என்று நீங்கள் மனதில் நினைக்கலாம்.
பூர்வபுண்ணியம் கெட்டால் கோவில் சென்றால் உங்களுக்கு நீங்களே வைத்துக்கொள்ளும் ஆப்பாக இருக்கும் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். நீங்கள் வேண்டும் என்றால் செய்து பாருங்கள் கோவில் சென்றால் நீங்கள் வணங்கும் அந்த கடவுளே உங்களுக்கு எதிராக போர்கொடி தூக்குவார். சில சோதிடர்கள் சொல்லுவார்கள் பூர்வபுண்ணியம் கெட்டால் குலதெய்வத்தில் இருந்து ஒரு ஐம்பது கிலோ மீட்டர் தள்ளி வீட்டை அமைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுவார்கள். சம்பந்தப்பட்ட நபரிடம் மட்டுமே இதற்கு பரிகாரம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட்டால் தீர்வு கிடைக்கும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
கும்பத்திற்கு ஐந்தில் சனி இருந்த ஒரு நயவஞ்சகனுக்கு எனது சகோதரியை திருமணம் செய்துவைத்து நயமாகப் பேசியே என் சகோதரியின் 20 பவுன் நகையையும் திருமணமான 3 மாதத்தில் வாங்கி அடகுவைத்து விட்டு கடனை அடைத்து நகைத் திருப்பச்சொன்ன போது என் சகோதரியை தகாத வார்த்தைகளில் பேசியதால் மனமுடைந்த சகோதரி தன் 10 மாதக்குழந்தையைக்கூட நினையாமல் தற்கொலை செய்துகொண்டால் அந்த உத்தமி.இத்தனைக்கும் திருமணமான 20 மாதத்திலே முடிந்தது என் சகோதரியின் மண(ண்) வாழ்க்கை. தற்போது அந்தக்குழந்தையையும் வைத்து எங்களிடமிருக்கும் மிச்ச ,சொச்சத்தையும் பறிக்க நினைக்கிறான்.என் சகோதரிக்கு திருமணத்திற்கு பொருத்தம் பார்த்த ஜோதிடனும் தன் வினைப்பதிவை அனுபவிக்க நேரிடும், இவனுக்கு என்ன தண்டனையை அந்த இறைநிலை வழங்கும் என்பதற்கும் காலம் தான் பதில் சொல்லவேண்டும்.இதை நான் காழ்ப்புணர்ச்சியால் சொல்லவில்லை.இறந்து 3 ஆண்டுகளாக நானும்,என் தாயாரும் படும் மரண்வேதனையால் சொல்கிறேன்.
Post a Comment