வணக்கம் நண்பர்களே !
ரிஷப ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஐந்தாவது வீட்டு தசா நடைபெற்றால் என்ன பலன் என்று இப்பதிவில் பார்க்கலாம்.
ரிஷபத்திற்க்கு ஐந்தாவது வீடாக வருவது கன்னி அதன் அதிபதி புதன். லக்கனத்தில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் இந்த வீட்டில் புதன் நட்பு
பெண் குழந்தைகள் அதிகமாக இருக்கும். அந்த குழந்தைகள் இந்த ஜாதகனுக்கு பெயர் பெற்று தரும். அரசாங்கத்தில் மூலம் வருமானம் வரும். விளையாட்டு துறையில் வெற்றி பெறுவார்.
ஐந்தாவது வீட்டு அதிபதி இரண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் ரிஷபத்திற்க்கு இரண்டாவது வீடாக வருவது மிதுனம் அதன் அதிபதி புதன். இது புதனுக்கு ஆட்சி வீடு
மூளையை வைத்து சம்பாதிப்பவர்களாக இருப்பார்கள். அறநிலையதுறையில் பணிபுரியும் வாய்ப்பு உருவாகும். தனவரவு நன்றாக இருக்கும். குழந்தை செல்வம் உடையவராக இருப்பார்கள்.
ஐந்தாவது வீட்டு அதிபதி மூன்றாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் ரிஷபத்திற்க்கு மூன்றாவது வீடாக வருவது கடகம் அதன் அதிபதி சந்திரன். புதனுக்கு இந்த வீடு பகை.
கடுமையான புத்திர தோஷம் ஏற்படும் அப்படியே குழந்தைகள் இருந்தாலும் அந்த குழந்தைகளால் எந்த உபயோகமும் இருக்காது. தைரியம் மிக்கவர் முரட்டு தனம் இருக்கும். புரோகர் தொழில் செய்து சம்பாதிப்பவராக இருப்பார்.
ஐந்தாவது வீட்டு அதிபதி நான்காவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் ரிஷபத்திற்க்கு நான்காவது வீடாக வருவது சிம்மம் அதன் அதிபதி சூரியன். புதனுக்கு இந்த வீடு நட்பு.
சூதாட்டத்தில் தோல்வியை சந்திப்பார். குழந்தைகள் இருக்காது. அப்படியே குழந்தைகள் இருந்தாலும் அந்த குழந்தைகளால் பிரச்சினை தான் வரும். வண்டி வாகன யோகம் இருக்கும். நிலங்கள் அதிகஅளவில் இருக்கும்.
ஐந்தாவது வீட்டு அதிபதி ஐந்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் ரிஷபத்திற்க்கு ஐந்தாவது வீடாக வருவது கன்னி அதன் அதிபதி புதன். புதனுக்கு இந்த வீடு ஆட்சி.
நல்ல அறிவாற்றல் நிறைந்தவர் எப்பேர்பட்ட பிரச்சினையும் தன் அறிவால் எளிதில் தீர்ப்பவர். விளையாட்டு துறையிலும் வெற்றி வாகை சூடுபவராக இருப்பார். திடீர் அதிர்ஷ்டசாலியாக மாறுவார். குழந்தை பாக்கியம் இருக்கும்.கடவுளின் அன்பை பெற்றவராக இருப்பார்.
ஐந்தாவது வீட்டு அதிபதி ஆறாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் ரிஷபத்திற்க்கு ஆறாவது வீடாக வருவது துலாம் அதன் அதிபதி சுக்கிரன். புதனுக்கு இந்த வீடு நட்பு
எடுத்த செயல் அனைத்தும் வெற்றி. திடீர் யோகம் இருக்கும். பங்கு வர்த்தகத்தில் லாபம் பெறுவார். ஊர் திருவிழாக்களை எடுத்து நடத்துவார். வியாபாரத்தில் வெற்றி பெறுவார்.
ஐந்தாவது வீட்டு அதிபதி ஏழாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் ரிஷபத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய். புதனுக்கு இந்த வீடு சமம்
துணைவரால் லாபம் ஏற்படும். எடுத்த செயலில் வெற்றி கிடைக்கும். பஞ்சாயத்து செய்பவராகவும் இருப்பார். கூட்டுத்தொழிலில் லாபம் ஏற்படும்.தாராள மனமுடையவராக இருப்பார். நண்பர்களுக்கு உதவி செய்வார்.
ஐந்தாவது வீட்டு அதிபதி எட்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் ரிஷபத்திற்க்கு எட்டாவது வீடாக வருவது தனுசு அதன் அதிபதி குரு. புதனுக்கு இந்த வீடு சமம்.
இல்லற வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும், எதை எடுத்தாலும் தோல்வியை சந்திப்பார். உடல் நலனும் பாதிக்கப்படும். குழந்தைகள் இருக்காது அப்படியே இருந்தாலும் அவர்கள் நோய்வாய்ப்பட்டு இறப்பார்கள். சிரமப்பட்டு வாழ்க்கையை நடத்துபவராக இருப்பார்
ஐந்தாவது வீட்டு அதிபதி ஒன்பதாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் ரிஷபத்திற்க்கு ஒன்பதாவது வீடாக வருவது மகரம் அதன் அதிபதி சனி. புதனுக்கு இந்த வீடு சமம்.
நல்ல மனவலிமை இருக்கும். பெரியோர்களின் அன்பை பெறுபவராக இருப்பார். சமுதாயத்தில் நற்பெயர் கிடைக்கும்.கல்வியில் திறமையுடைவராக இருப்பார் சாஸ்திரங்கள் அனைத்தையும் கற்றவராக இருப்பார்.
ஐந்தாவது வீட்டு அதிபதி பத்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் ரிஷபத்திற்க்கு பத்தாவது வீடாக வருவது கும்பம் அதன் அதிபதி சனி. புதனுக்கு இந்த வீடு சமம்
குழந்தை பாக்கியம் இருக்கும். தொழிலில் வெற்றி வாகை சூடுவார். எந்த தொழில் செய்தாலும் சிறக்கும். நடிப்பு துறையில் ஈடுபட்டு பேரும் புகழும் சம்பாதிப்பார். அரசாங்கத்தில் உயர்பதவி தேடிவரும். சந்தோஷமாக வாழ்க்கை அமையும்.
ஐந்தாவது வீட்டு அதிபதி பதினோராவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் ரிஷபத்திற்க்கு பதினோராவது வீடாக வருவது மீனம் அதன் அதிபதி குரு. புதனுக்கு இந்த வீடு நீசம்.
குழந்தை செல்வம் இருக்கும். தீவிர உழைப்பாளியாக இருப்பார். போராடியாவது வாழ்க்கையில் வெற்றி வாகை சூடவேண்டும் என்று நினைப்பவர்.பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். அரசாங்கத்தின் மூலம் உதவி கிடைக்கும்.
ஐந்தாவது வீட்டு அதிபதி பனிரெண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் ரிஷபத்திற்க்கு பனிரெண்டாவது வீடாக வருவது மேஷம் அதன் அதிபதி செவ்வாய். புதனுக்கு இந்த வீடு சமம்
மருத்துவ செலவு ஏற்படும் புத்திர தோஷம் ஏற்படும் அப்படியே குழந்தைகள் இருந்தாலும் அவர்களால் செலவு தான் ஏற்படும்.அமைதி இல்லாமல் காலத்தை ஒட்டவேண்டிவரும். உறவினர்கள் உதவி கிடைக்காது.
நன்றி நண்பர்களே
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment