வணக்கம் நண்பர்களே!
பூர்வ புண்ணியபகுதியில் ஒவ்வொரு லக்கினத்திற்க்கும் ஐந்தில் சனி நின்றால் முன்ஜென்மத்தில் என்ன செய்திருப்பார்கள் என்று பார்த்து வருகிறோம் அந்த வரிசையில் இப்பதிவில் மீன லக்கினத்தை கொண்டவர்களுக்கு ஐந்தில் சனி நின்றால் முன்ஜென்மத்தில் என்ன செய்திருப்பார்கள் என்று பார்க்கலாம்.
மீன ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது கடகம் அதன் அதிபதி சந்திரன். சனி ஐந்தில் அமர்ந்தால் அதுவும் சந்திரனின் வீட்டில் அமருகிறது. சனி பகையாக அமரும்.
எப்பொழுதும் சனிக்கும் சந்திரனுக்கும் ஒத்துவராது. சந்திரன் ராசியில் அமர்ந்தால் பிரச்சினை தான் உருவாகும்
யாரை கெடுத்து இருப்பார்?
மீன லக்கினத்திற்க்கு சனி பதினோராவது வீட்டிற்க்கும் பனிரெண்டாவது வீட்டிற்க்கும் காரகன் வகிக்கிறார்.
மூத்த சகோதர சகோதரிகளை கெடுத்து இருப்பார் நண்பர்களை கெடுத்து இருப்பார் மற்றும் ஆன்மீக ஸ்தலங்களில் உள்ளவரை கெடுத்து இருப்பார்.
எப்படி கெடுத்து இருப்பார்?
மனக்காரகன் சந்திரன் வீட்டில் இருப்பதால் மனதால் கொலை செய்ய தூண்டிவிட்டு இருப்பார். நேரிடையாக ஒருவரை கொலை செய்வதை விட மனதால் கொலை செய்வது மிகப்பெரிய பாவமாகும். இப்படி தான் இவர் முன்ஜென்மத்தில் நடந்துக்கொண்டு இருப்பார். இப்பொழுது அந்த பாவத்திற்க்காக இவரின் மனம் சஞ்சலப்பட்டுக்கொண்டே இருக்கும்.
பரிகாரம் என்ன?
முதல் பரிகாரம் சம்பந்தப்பட்ட நபரை தேடிபிடித்து அவருக்கு உதவி செய்வது.உங்களின் நண்பர்கள் மூத்த சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்வது நன்மை அளிக்கும்.
மனதிற்க்கு இனிமை தரும் விசயங்களில் மனதை ஈடுபடுத்துங்கள். உங்களின் மனம் தான் உங்களை கொல்லும். ஆண்டவன் உதவி செய்வதற்க்கு பல வடிவங்களில் வருவான் ஆனால் உங்களை கொல்ல வருவதற்க்கு உங்களின் மனம் தான் முக்கிய கருவியாக எடுத்துவருவான் என்பது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ உங்களுக்கு பொருந்தும்.மனதால் கூட அடுத்தவருக்கு தீங்க இழைக்காமல் இருப்பது மிக உயர்ந்தது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment