Followers

Tuesday, January 1, 2013

பூர்வ புண்ணியம் 8



வணக்கம் நண்பர்களே !
                           பூர்வ புண்ணியத்தில் இப்பதிவில் ஒரு நல்ல கருத்தை பார்க்கலாம். 

பூர்வ புண்ணியத்தை வைத்து தான் அவர்களின் நுண்ணறிவை பார்க்கமுடியும். இந்த வீடு நன்றாக இருந்தால் புத்திக்கூர்மை உடையவர் என்று சொல்லலாம். இந்த வீடு கெட்டால் புத்திக்கூர்மையில் பிரச்சினை என்று எடுத்துக்கொள்ளலாம்.

இந்த வீட்டில் கெட்டகிரகங்கள் அமரும் போது மனதை கெடுத்துவிடும். அடிக்கடி உணர்ச்சிவசப்படகூடியவராக இருப்பார்கள். இந்திரியங்கள் வழியாக உள்வாங்கப்படும் ஒவ்வொரு விஷயமும் நமக்குள் சில எண்ணங்களை விளைக்கின்றன. அந்த எண்ணங்கள் பலவகையானவை. 

இந்த எண்ணங்கள் என்ன செய்யும் சும்மா இருக்குமா என்றால் கண்டிப்பாக சும்மா இருக்காது அந்த எண்ணங்கள் அவற்றுக்குத் தொடர்புடைய பல்வேறு எண்ணங்களை விளைக்கின்றன. இந்த எண்ணங்களுக்கு ஆதாரம் என்ன என்று நாம் அறியாவண்ணம் தொடர்ந்து எண்ணங்கள் விளைந்தவாறே இருக்கின்றன அட நாம் விழித்திருக்கும் போது ஒவ்வொரு கணமும் நடைபெறுகிறது தூங்கும்போது நடைபெறுமா என்றால் கனவிலும் எண்ணங்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. 

நான் பெசன்ட்நகரில் தனிமையாக கடலை ரசிப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. கடலை பார்க்கும் போது எனக்குள் அப்படி ஒரு ஆனந்தம் மற்றும் பல ஆன்மீக விசயங்களை கண்டறிய என்னுடைய மனதை செலுத்துவதும் இந்த இடத்தில் தான். சரி இதை விட்டுவிட்டு சொல்ல வந்ததை சொல்லிவிடுவோம்.

கடலில் தொடர்ந்து அலைகள் எழுவதைப்போல், இடைவெளி இன்றி நம்முள் எண்ணங்கள் எழுந்தவாறே இருக்கின்றன. ஒரு அலை ஓய்வதற்குள், மற்றோரு அலை உருவாவதைப் போல, ஒரு எண்ணம் மறையும் முன்பே, மற்றொரு எண்ணம் உருவாகின்றது. ஒரு அலை ஓயும் முன்னே, மீண்டும் தொடர் அலைகளால் வலுப்பெற்று மீண்டும் அலையாவதைப் போல, ஒரு எண்ணம் ஓயும் முன்னே, தொடர் எண்ணங்களால் மீண்டும் வலுப்பெறுகின்றது. இது மனிதனுக்கு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.

நீங்கள் ஆன்மீக பாதையில் செல்ல முதல் நிலை இந்த எண்ணங்களை கட்டுபடுத்துதல் தான் என்பதை முதலில் நினைவில் வைக்கவேண்டும். பூர்வ புண்ணியத்தில் உங்களது மனது இருக்கிறது இந்த மனதை தொடர்ந்து எண்ணங்களை உருவாக்கவைப்பது இதில் அமரும் கிரகங்கள் தான். இதில் உட்கார்ந்துக்கொண்டு சும்மா இருக்காது உங்களின் மனதின் எண்ணங்களை தூண்டிக்கொண்டே இருக்கும். இந்த வீடு நன்றாக இருக்கும் போதும் எண்ணங்களை தூண்டும் அந்த எண்ணங்கள் ஆக்கபூர்வமாக இருக்கும் தீய கிரகங்களின் எண்ணங்கள் விளைவு மோசமாக இருக்கும்.

நாம் எண்ணங்களுக்கு மனக்காரகன் சந்திரன் தான் முக்கியம் என்று நினைத்துக்கொண்டு இருப்போம் அதுவும் உண்மை தான் அதை விட இந்த ஐந்தாம் வீடு முக்கியம் என்பதை நினைவில் வையுங்கள். 

ஐந்தாம் வீட்டில் அமரும் கிரகத்திற்க்கு ஏற்ப அவர்களின் புத்தி வேலை செய்யும். இந்த வீடு கெடும்போது இவர்களின் மண்டையை யாரோ ஒருவர் கம்பியை வைத்து குத்துவது போல் தோன்றும். ஏதோ ஒன்று மண்டையில் ஏற்படுகிற உணர்வு தெரிந்துகொண்டே இருக்கும். இப்ப பார்த்தீர்களா நண்பர்களே பூர்வ புண்ணியம் ஆன்மீகத்திற்க்கு எவ்வளவு நன்றாக இருக்கவேண்டும் என்று உங்களுக்கு புரியும். மனதில் எண்ணங்கள் எழும்பாத போது மட்டுமே ஆன்மீகம் வரும்.

நமக்கு நுண்ணறிவு என்பதை காட்டும் இடம் பூர்வபுண்ணியத்தை பற்றி தெரிந்ததை சொல்லி உள்ளேன் நண்பர்களே ஏதோ படித்துவிட்டு செல்லாமல் உங்களின் மனதை இதில் செலுத்தி உங்களை பரிசோதித்து பாருங்கள்.

ஐந்தாம் வீட்டை பொருத்தவரை அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படதான் செய்யும். அப்படி பாதிக்கப்படவில்லை என்றால் நீங்கள் மனித ஜென்மம் எடுக்கமாட்டீர்கள். மனித ஜென்மம் எடுத்தால் எண்ணங்கள் உருவாக தான் செய்யும். எண்ணங்கள் இல்லாத போது கடவுளிடம் நீங்கள் சென்றுவிடுவீர்கள். 

ஐந்தாவது வீட்டை பொருத்தவரை எண்ணங்களை குறைப்பதற்க்கு வழி இருக்கிறதா என்று தான் பார்க்கவேண்டும். இந்த எண்ணங்களை குறைத்து பைத்தியம் ஏற்படாமல் இருக்க வழி செய்வது ஆன்மீகத்தின் முதல் வேலை.  இதனை செய்வது உங்கள் குருநாதரின் முதல் வேலையாக இருக்கும். 

நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



No comments: