வணக்கம் நண்பர்களே!
இன்று காலை என்னுடன் பேசிய நண்பர் கார்த்திக் ஒரு கருத்தை சொன்னார். நீங்கள் ஆன்மீகத்தில் இருப்பவர்களை சைவ உணவை உட்கொள்ளுங்கள் என்று ஏன் சொல்லுவதில்லை என்று கேட்டார். கோழிகளை கொன்றாலும் அது உயிர் தானே எப்படி உயிர்களை கொன்றுக்கொண்டு ஆன்மீகத்தில் ஈடுபடமுடியும் என்றும் கேட்டார்.
நான் ஏற்கனவே சொன்னது தான் இதிலும் சொல்லுகிறேன் உயிர்களில் சின்ன உயிர் பெரிய உயிர் என்று கிடையாது அனைத்தும் உயிர் தான். மரங்களும் உயிர்கள் தான். நாம் வாழ்க்கை தினமும் நடத்துவது என்றால் கண்டிப்பாக ஏதாவது ஒரு உயிரை கொன்று தான் நடத்த வேண்டியுள்ளது. அசைவம் சாப்பிடுவதும் சைவம் சாப்பிடுவதும் அவர் அவர்களின் விருப்பம் அதில் தலையிட வேண்டியதில்லை.
நீங்கள் நினைப்பது என்ன என்றால் ஆன்மீகம் என்பது வெளிவேஷம் போட்டுக்கொண்டு இருப்பது என்று நினைக்கிறீர்கள் அது தவறான ஒன்று. ஆன்மீகம் மனதில் இருக்கவேண்டும் அப்பொழுது மட்டும் அது சிறந்த நிலைக்கு வரமுடியும். வெளியில் காட்டிக்கொள்பவர்கள் சொல்லுவார்கள் அசைவம் சாப்பிடகூடாது. அதன் மூலம் பாவம் நமக்கு வரும். அப்படி இரு இப்படி இரு என்று சொல்லுவார்கள். இவர்கள் இப்படி சொல்லிவிட்டு மனதால் பல பேரை கொன்றுக்கொண்டு இருப்பார்கள். ஒருவரை நேரில் கொல்லுவதை விட மனதால் கொல்லுவது மிகப்பெரிய பாவம்.
ஏகாப்பட்ட கண்டிஷன் போட்டுக்கொண்டு ஆன்மீகத்தை கற்பித்துகொடுத்தால் அதன் மேல் வெறுப்பு தான் வரும் அதைபோல் மதங்களில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் குடும்பத்தை நடத்துபவர்களுக்கு தான்.
பிரம்மசரியம் என்பது அது ஒரு ஆன்மீகவழி தான். அது மட்டும் தான் வழி என்று நினைத்தால் தவறு. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நிறைய ஆன்மீகவழிகளை சொல்லியுள்ளார்கள் அதனை எடுத்துக்கொண்டு அதன்படி நடக்கலாம்.
எங்கு சுதந்திரம் அதிகமாக இருக்கிறதோ அங்கு தான் மனது அதிக ஈடுபாட்டை காட்டும். நமது மதத்தில் அதிக சுதந்திரம் இருக்கிறது இடையில் வந்தவர்கள் அதிககட்டுபாட்டை விதிக்கிறார்கள் அது தவறு.
எப்படி வேண்டுமானாலும் இருந்துக்கொண்டு ஆன்மீகத்தில் ஈடுபடும்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மீகம் உங்களை மாற்றும். இதனை நீங்கள் அனுபவத்தில் உணரலாம்.
நன்றி நண்பர்களே
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
வணக்கம் sir. இது எந்த கோவில்? ஏற்கனவே போன மாதிரி இருக்கு ஆனால் தெரியவில்லை.please answer to me sir.
Post a Comment