வணக்கம் நண்பர்களே !
பூர்வ புண்ணிய பகுதியில் ஒரு நல்ல தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
ஒருவருக்கு பூர்வபுண்ணியம் நன்றாக கெடும்போது அவர்கள் காதலில் தோல்வியை சந்திப்பார்கள். பூர்வபுண்ணியம் கெட்டாலே அவர்கள் உணர்ச்சிபூர்வமாக விளங்குவார்கள். இவர்கள் உடனே காதலில் விழுந்துவிடுவார்கள்.
காதலை எதாவது ஒரு விதத்தில் தோல்விகளை சந்தித்து விடுவார்கள். எப்படி தோல்வியை சந்திப்பார்கள் என்றால் என் அம்மா என்னை திட்டுவார் என் அப்பா என்னை திட்டுவார் நான் சார்ந்து இருக்கும் சமுதாயம் மிகப்பெரியது அவர்களை விட்டு விட்டு என்னால் உன்னை திருமணம் செய்யமுடியாது என்று சொல்லுவார்கள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சமுதாயம் அவன் பின்னாடி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் என்னோமே இவர்களுக்கு மட்டும் தான் சமுதாயம் இருப்பது போல் பேசுவார்கள். இப்படி எல்லாம் பேசுவது என்றால் ஏன் காதலிக்க வேண்டும் சும்மா இருந்திருக்கலாம் அல்லவா ஆனால் இவர்களால் இருக்கமுடியாது. ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அவர்களே காதலை ஒதுக்கிவிடுவார்கள். பிறகு அதன் மூலம் கடுமையான வலியை அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஏற்படுத்திக்கொண்டு இருக்கும். இவர்கள் வாழ்க்கை பெரும்பாலும் அழுது கொண்டே இருப்பார்கள்.
இவர்களின் திருமண வாழ்க்கையை பார்த்தாலும் சிறக்காது. ஏதோ கடமைக்காக திருமணம் செய்தோம் என்ற நிலையில் திருமண வாழ்க்கையை ஒட்டிக்கொண்டு இருப்பார்கள். இவர்களின் திருமண வாழ்க்கையில் உயிர் இருக்காது. ஏதோ வாழ்கிறோம் என்ற நிலையில் இருக்கும். உடல் ஒருவருக்கும் உயிர் ஒருவருக்கும் என்ற நிலை இவர்கள் வாழ்க்கை முழுவதும் இருக்கும்.
பூர்வபுண்ணியத்தை சரிசெய்ய என்ன வழி என்று யோசித்து பாருங்கள் அப்பொழுது இதற்கு வழி என்ன என்று தெரியும்.
நன்றி நண்பர்களே
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
itharuku vali thaan enna
வணக்கம் இதற்கு வழி உங்களுக்குள்ளேயே இருக்கிறது. சம்பந்தப்பட்ட நபரை நீங்கள் வாழ்க்கையில் ஒருமுறை கண்டிப்பாக சந்திப்பீர்கள். அவரை பிடித்துக்கொள்ளுங்கள் அது மட்டும் தான் சரியான பரிகாரம். வேறு ஏதும் இருக்கமுடியாது. அவரை சந்தித்து பிரச்சினை செய்யாதீர்கள். வழியை தேடுங்கள்.
Post a Comment