வணக்கம் நண்பர்களே !
உங்கள் குலதெய்வம் உங்களை காக்குமா என்று இப்பதிவில் ஒரு கருத்தை பார்க்கலாம்.
குலதெய்வ அருள் அனைவருக்கும் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட எதிர்ப்புகள் வந்தாலும் வெற்றி பெற்றுவிடலாம். ஒரு சிலருக்கு குலதெய்வ அருள் நன்றாக இருந்தும் அவர்களை ஒரு சில மாந்தீரிகர்கள் அவர்களுக்கு தீங்கு இழைத்துவிடுவார்கள் இது எப்படி என்று இப்பதிவில் பார்க்கலாம்.
எந்த ஒரு ஆன்மீகவாதியும் மற்றும் மந்திரவாதியும் ஒரு சக்தியை வைத்திருப்பார்கள் என்று ஏற்கனவே உங்களுக்கு தெரியும். இந்த சக்தி மிகப்பெரிய அளவில் உள்ளதாக தான் இருக்கும். இவர்கள் ஒரு வீட்டிற்க்கு செல்லும் போது இவர்கள் என்ன செய்வார்கள் என்றால் இவர்கள் செல்வதற்க்கு முன்பே இவர்களின் சக்தியை அந்த வீட்டிற்க்கு அனுப்பிவிடுவார்கள்.
அந்த சக்தி என்ன செய்யும் என்றால் அந்த வீட்டின் குலதெய்வத்தை வெளியில் அனுப்பிவிடும் அவர்களின் குலதெய்வத்தை இவர்களுக்கு காவல் காப்பது போல் செய்துவிடுவார்கள். அதன்பிறகே இவர்கள் அந்த வீட்டிற்க்கு உள்ளே செல்வார்கள். இவர்கள் போய் அந்த வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு வெளியில் வரும்போது மீண்டும் குலதெய்வம் வீட்டிற்க்குள் செல்லும்.
இந்த நேரத்தில் நீங்கள் கேட்கலாம் என்ன குலதெய்வம் நமக்கு தானே நல்லது செய்யவேண்டும் என்று கேட்க தோன்றும் உண்மை தான். என்ன செய்வது நாம் குலதெய்வத்தை அந்த அளவுக்கு தான் கும்பிடுகிறோம். அவர்கள் அதையே வேலையாக வைத்திருப்பவர்கள் அவர்கள் சொல்படி நடக்கும்.
மாந்தீரீகம் செய்பவர்கள் அதிகம்பேர் நமது குலதெய்வத்தை வைத்துதான் அவர்களின் வேலையே முடிப்பார்கள். நமது குலதெய்வத்தை வைத்தே நமது கணக்கை தீர்த்துவிடுவார்கள். மாந்தீரீகர்கள் குலதெய்வம் மற்றும் எல்லை தெய்வத்தை வைத்தே அனைத்தையும் சாதித்துவிடுவார்கள்.
நமது குலதெய்வம் நம்மை அடிப்பது போல் செய்வது தான் அவர்களின் முதல் வேலை. ஏன் என்றால் தெரிந்தவனை வைத்து அடித்தால் அவனுக்கு எங்கு அடிக்கலாம் என்று தெரியும் அதனால் இவர்கள் இப்படி செய்வார்கள். அந்தளவுக்கு தாந்தீரிகமாக தனது வேலையை முடிப்பார்கள்.
ஒருமுறை மாந்தீரிக பாதிப்பு குடும்பத்திற்க்கு வந்துவிட்டால் அவர்களின் குடும்பத்தை காப்பாற்றுவது கடினம். அந்த மாந்தீரிக பாதிப்பில் இருந்து மீண்டும் மீள பல தலைமுறைகள் போராடவேண்டி உள்ளது இதனை நான் பல குடும்பங்களில் பார்த்திருக்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment