Followers

Wednesday, January 30, 2013

சிம்மம் :ஐந்தில் சனி



வணக்கம் நண்பர்களே !

                     பூர்வ புண்ணியபகுதியில் முன்ஜென்மத்தில் என்ன தவறை ஒரு மனிதன் செய்திருப்பார் என்று சோதிடம் வழியாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இப்பதிவில் சிம்மம் ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு என்ன தவறு செய்திருப்பார்கள் என்பதை பார்க்கலாம்.

சிம்ம லக்கினத்திற்க்கு ஐந்தாவது வீடாக வருவது தனுசு அதன் அதிபதி குரு. தனுசில் சனி சமமாக அமர்கிறார். சிம்ம ராசிக்கு சனி எங்கு அமர்ந்தாலும் மிகப்பெரிய கெடுதலை தான் செய்வார். 

யாரை கெடுத்து இருப்பார்?

சிம்ம லக்கனத்திற்க்கு ஆறாவது வீட்டிற்க்கும் ஏழாவது வீட்டிற்க்கும் சனி பகவான் காரகம் வகிக்கிறார். இவரின் துணைவரை கெடுத்து இருப்பார் அல்லது இவரின் எதிரியை கெடுத்து இருப்பார்.

எப்படி கெடுத்து இருப்பார்?

துணைவர் விவாகாரத்து கேட்டு இருப்பார் அதனால் அவரை போட்டுதள்ளியிருப்பார். எதிரியால் அடிக்கடி தொந்தரவு ஏற்பட்டுக்கொண்டு இருந்திருக்கும் அதனால் அவரையும் கொன்றுருக்ககூடும்.


என்ன பரிகாரம்?

வழக்கம் போல் சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டுக்கொண்டு அவருக்கு என்ன செய்யவேண்டுமோ அதனை செய்யுங்கள். 

நண்பர்களே நான் கொடுத்த தகவலை வைத்து உங்களின் ஜாதகத்தை எடுத்து வைத்து பாருங்கள் இந்த மாதிரி அமைப்பு இருக்கும்பட்சத்தில் உங்களின் உள்ளுணர்வு ஒரு உறுத்தலை தரும். அப்பொழுதே தெரியும் எங்கேயே கணக்கு இடிக்கிறதே. சும்மா எடுத்து பாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 



1 comment:

SportsJunkies said...

What about simha lagnam-5th sani in a stree jatagam