வணக்கம் நண்பர்களே !
பூர்வ புண்ணியதொடரில் என்னுடைய பூர்வபுண்ணியத்தைப்பற்றி கொஞ்சம் சொல்லுகிறேன். இதுவும் சுவாராசியமாக இருக்கும்.
என்னிடம் சோதிடம் பார்க்க ஒரு நபர் போனில் தொடர்பு கொண்டார். அது ஒரு பெண். அந்த பெண் முதலில் அவருடைய ஜாதகத்தை கொடுத்து பார்க்க சொன்னார் பிறகு அவருடைய தந்தையின் ஜாதகத்தை கொடுத்து பார்க்க சொன்னார்.
முதலில் அவர் ஒரு ஜாதகத்திற்க்கு மட்டும் பணத்தை செலுத்தி இருந்தார். நான் யாருக்கும் பலனை டைப் செய்து கொடுப்பதில்லை ஆனால் இவருக்கு டைப் செய்து கொடுக்க வேண்டும் என்று மனதில் நினைத்து டைப் செய்து அனுப்பினேன். இது ஏன் நடந்தது என்றும் அப்பொழுது தெரியவில்லை. நான் டைப் செய்து அனுப்புவது ஒரு நாளைக்கு ஒரு பக்கம் என்று டைப் செய்வது பிறகு மாலை நேரத்தில் அந்த பெண் என்னுடன் போனில் பேசுவார். அப்படி பேசும்போதே ஒரு ஈர்ப்பு தோன்றியது .
அப்பொழுது தொடர்பு துண்டித்துவிட்டது மறுபடியும் சில நாட்கள் சென்று என்னை தொடர்பு கொண்டு ஒரு ஆன்மீகவிசயமாக பேசினார். சரி என்று அதற்கு நான் ஒப்புதல் அளித்தேன். ஒரு நாள் ஒரு ஆன்மீகத்திற்க்காக ஒரு காட்டில் உள்ள கோவிலுக்கு சென்றேன். அந்த கோவில் அந்த ஈசனை நான் பார்க்கும்போது என்னுடைய முன்ஜென்மத்தில் இந்த பெண் பற்றி தெரியவந்தது. பல பிறவிகளில் இந்த பெண் தான் எனக்கு மனைவியாக இருந்தவர் என்று தெரியவந்தது.
அதனைப்பற்றி நான் அந்த பெண்ணிடம் சொல்லவில்லை. அந்த பெண் அயல்நாட்டில் வேலை பார்த்து வந்தவர் பிறகு ஒரு மாதத்திற்க்கு முன்னர் அவர் இந்தியா வந்தார். இந்தியா வந்து ஒரு நாள் அவர் சென்னைக்கு என்னை சந்திக்க வந்தார். என்னை பார்த்தது அவரின் ஆன்மீக தேடுதலுக்காக ஒரு சில சந்தேகங்களை கேட்க வந்தார்.
அவர் என்னிடம் அதிகமாக கேள்வி கேட்டது எதை என்றால் உங்களுக்கு திருமணம் எப்பொழுது யாரை திருமணம் செய்யபோகிறீர்கள் என்று தான் கேட்டார். நான் மனதிற்க்குள் சிரித்துவிட்டு இனிதான் பெண்ணை பார்க்கவேண்டும் என்று சொன்னேன்.
திரும்பி அவரின் வீட்டிற்க்கு சென்றுவிட்டார். அவரின் வீட்டிற்க்கு சென்று சில நாட்கள் சென்று அவரின் வீட்டிற்க்கு நான் சென்றேன். எதற்க்காக சென்றேன் என்றால் அவரின் முன்ஜென்மத்தைப்பற்றி அவருக்கு தெரியவந்தவுடன் அவர் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டார். அவரின் ஆத்மா என்னை தேடஆரம்பித்தவுடன் அவருக்கு உடல்நிலையில் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. அதனை சரிசெய்ய நான் சென்றேன். அவரின் வீட்டிற்க்கு நான் சென்றவுடன் அவர் எனது கையை இறுக்கிபிடித்துக்கொண்டார்.அவரை சமாதானம் செய்து விட்டு சில நேரங்கள் பேசினேன்.
அவர்களின் வீட்டில் உள்ளவர்களுடன் பேசிவிட்டு சென்னை திரும்பிவிட்டேன். மறுநாள் அவர் என்னை காதலிப்பதாக சொன்னார். பிறகு 10 நாட்கள் கூட ஆகவில்லை காதலை வாபஸ் பெற்றுவிட்டார் என் வாழ்க்கையில் அதிக கோபபட்ட நாள் என்றால் அந்த நாள் தான். கஷ்டப்பட்டு அந்த கோபத்தை அடக்கினேன். நன்றாக திட்டிவிட்டேன்.
என்ன காரணம் என்றால் பணம் தான் பிரச்சினை. விதி என்ன செய்யும் என்று பார்க்கலாம் என்று விட்டுவிட்டேன். அவரின் மேல் எந்த கோபமும் இப்பொழுது இல்லை. பல பிறவியில் அவர் தான் என் மனைவியாக இருந்தவர். ஒரு பிறவியில் அவருக்கு மகனாக இருந்திருக்கிறேன்.
இதனைப்பற்றி அடுத்த பதிவிலும் தருகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment