Followers

Monday, January 28, 2013

அறிவிப்பு


வணக்கம் நண்பர்களே !

மூன்று நாட்களாக பல ஸ்தலங்களுக்கு சென்று வந்ததால் உங்களை அதிகம் தொடர்புக்கொள்ள முடியவில்லை. 

பல நண்பர்கள் தொடர்புக்கொண்டு இதனை படிக்கும்போது ஆன்மீக அனுபவ தொடர் பயமாக இருக்கிறது என்று சொன்னார்கள்.படிக்கும்போது பயமாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஆன்மீக அனுபவம் தொடர் வரும் போது படிக்கவேண்டாம். 

ஆன்மீக அனுபத்தை படிப்பவர்கள் அதிகபட்சமாக ஆன்மீகத்தில் உயர்நிலையில் இருப்பவர்கள் அதிகம் பேர் என்னை தொடர்புக்கொண்டு இன்னும் நிறைய எழுதுங்கள் என்று சொல்லுகிறார்கள் அவர்களுக்காக நான் எழுதவேண்டியுள்ளது. பயமாக இருப்பவர்களுக்கு சோதிடபாடங்களை படித்துக்கொள்ளவும். தனியாக பதிவை ஆரம்பித்து ஆன்மீக அனுபவங்கள் எழுதலாம் ஆனால் அது உங்களை சுற்றிவிடுதல் போல் இருக்கும் என்பதால் இந்த பதிவிலேயே அனைத்தையும் தந்துவிடுகிறேன்.

முன்ஜென்மத்திற்க்கு பூர்வபுண்ணியதொடரையும்
இந்த ஜென்மத்திற்க்கு சோதிடபாடத்தையும்
இறப்பிற்க்கு(மறு ஜென்மத்திற்க்கு )ஆன்மீக அனுபவங்களையும்

மூன்று பகுதியாக பிரித்து எழுதுகிறேன். என்னிடம் இருப்பதை வெளிப்படுத்துவதற்க்கு இந்த தளம் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. என்னிடம் இருப்பதை என்னிடம வைத்துக்கொண்டால் அது எனக்கு பிரச்சினை என்பதால் அதனை கொட்டிவிடுகிறேன். உங்களுக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு தேவையற்றைவையை விட்டுவிடுங்கள்.

நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: