வணக்கம் நண்பர்களே !
ஐந்தில் சனி நின்றால் என்ன தவறை செய்திருப்பார்கள் என்று இதுவரை ஒவ்வொரு லக்கினத்திற்க்கும் பார்த்தோம்.
நீங்கள் அதனை பார்த்து பயம்கொள்ளாமல் அதற்கான தீர்வு என்ன என்பதை சிந்தித்து ஒரு முடிவு எடுத்தால் போதும் உங்களின் கர்மாவை தீர்க்கலாம்.
பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு கேட்டார்கள் அவர்களை எப்படி கண்டுபிடிப்பது எந்த மாதிரி பரிகாரத்தை அவர்களுக்கு செய்வது என்று கேட்டார்கள். பல பேர் இவர்களை நாங்கள் எங்கே தேடுவது என்றும் கேட்டார்கள்.
உங்களின் ஜாதகத்தை வைத்து அலசி பாருங்கள் தெரியவரும். உங்களின் உள்ளுக்குள் ஒரு தேடலை வைத்துவிடுங்கள் எப்படியாவது அவர்களை கண்டுக்கொள்ள வேண்டும் என்று பாருங்கள் உங்களின் ஆத்மா அவர்களை கண்டுக்கொண்டுவிடும்.
உங்களின் முன்ஜென்மத்தில் சம்பந்தப்பட்ட ஒருவரை நீங்கள் பார்த்துவிட்டீர்கள் என்றால் உங்களின் ஆத்மா அவ்வளவு பாசத்துடன் அவர்களை பார்க்க ஆரம்பிக்கும்.அவர்களை பார்க்கும் சந்திப்பு இருக்கிறதே அப்பொழுது நீங்கள் கடவுளின் கருணை நீங்கள் உணரலாம். மனிதபிறப்பு எடுத்த அர்த்தத்தை உணரும் தருணம் அதுவாகதான் இருக்கும்.
பூர்வபுண்ணியத்தை எழுத ஆரம்பித்தது கடவுளின் செயலாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். நாமக்கல்லில் இருந்து நண்பர் கார்த்திக் என்பர் என்னை தொடர்புக்கொண்டு முன்ஜென்மத்தை கண்டறிய வழி சொல்லுங்கள் என்று கேட்டார் அப்பொழுது அவரிடம் அதற்கு மந்திரசக்தி பெற்றுருக்க வேண்டும் என்று சொன்னேன்.
கடந்த பெளர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் சென்று இருந்தேன் அப்பொழுது வேலூரில் இருந்து வந்த பாலு என்ற நண்பர் சில தகவலை சொன்னார். பிளாக்கில் புதுமையான விசத்தை எழுதுங்கள் அப்பொழுது அனைவரும் படித்து பயன்பெறுவார்கள் என்று இதற்கு அடித்தளத்தை அமைத்தார் அப்பொழுதே இதனைப்பற்றி எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டு கிரிவலம் சென்றேன். அப்பொழுது உதயமானது தான் இந்த சோதிடம் வழியாக முன்ஜென்மத்தைப்பற்றி அறிவது .
பல நண்பர்கள் எதனை ஆதாரமாக வைத்து இதனை எழுதுகிறீர்கள் என்று கேட்டார்கள் என்னுடைய சுயமுயற்சியால் என்னால் உணரப்பட்ட அனுபவத்தை வைத்துக்கொண்டு இதனை எழுதுகிறேன். கண்டிப்பாக நீங்கள் இதனை உங்களின் அனுபத்தில் பார்க்கும்போது இது உண்மை என்று தெரியவரும்.
நான் படித்த உபநிடங்கள் புராணங்கள் மற்றும் மதநூல்களில் உள்ள ஆணித்தரமான கருத்தை வைத்து இதனை என் வழியில் சொல்லிக்கொண்டு உள்ளேன். அந்த நூல்களின் பெயரை சொன்னால் கூட தெரிவதற்க்கு வாய்ப்பில்லை. இதனைப்பற்றி நீங்கள் ஆராய்ச்சி செய்யவேண்டியதில்லை இதனை தெரிந்துக்கொண்டு நீங்கள் செய்யவேண்டியதை செய்ய பாருங்கள். இந்து மதத்தின் ஆணிவேர் என்பது கர்மாதான் அதனை போக்க என்ன வழி என்று பார்த்தால் போதும்.
கண்டிப்பாக சம்பந்தப்பட்ட நபர் தான் இதற்கு பரிகாரம். கோவில் சென்று தீர்க்கிறேன் அன்னதானம் செய்து தீர்க்கிறேன் யோகா செய்கிறேன் தியானம் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு வீணாக காலத்தை கடத்த வேண்டாம். பூர்வ புண்ணியம் பாதிக்கப்பட்டால் எப்படி மறுஜென்மம் எடுப்பீர்கள் என்று சொல்லிவிட்டேன்.
அனைத்தும் உங்களின் கையில் தான் உள்ளது செயல்படுங்கள். ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி துணையுடன் மற்றும் குருவருளால் தொடர்நது பூர்வபுண்ணியத்தை பற்றி பார்க்கலாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment